Latest Updates
-
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க..
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா?
இந்த உலகில் அசைவ உணவு சாப்பிடுவர்கள் எவ்வளவு நபர் இருக்கிறீர்களோ? அதேபோல சைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. சொல்லப்போனால் தற்போது சைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் உள்ள உணவுப் பிரியர்கள் தாவர அடிப்படையிலான உணவுகளின் சிறப்பை உணரத் தொடங்கியுள்ள நிலையில், சைவ உணவு முறைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

சைவ உணவு ஒரு குறிப்பிட்ட உணவுப் பழக்கமாக மட்டுமின்றி, அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இந்தச் சைவ உணவு முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது? அதிக எண்ணிக்கையிலான சைவ உணவு உண்பவர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியல் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியா
World Atlas அறிக்கையின்படி, இந்திய மக்கள் தொகையில் கிட்டதட்ட 38% பேர் சைவ உணவு உண்பவர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள், இதன்மூலம் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. காய்கறிகள், பருப்பு வகைகள், தானியங்கள் மற்றும் பால் பொருட்கள் என பல்வேறு வகையான தாவர அடிப்படையிலான உணவுகளை உள்ளடக்கிய சைவ உணவு வகைகளின் இந்தியாவின் வலுவான பாரம்பரியமே இந்தியா முதலிடத்தில் இருப்பதற்கான காரணமாகும்.
மெக்சிகோ
தாவர அடிப்படையிலான உணவைப் பின்பற்றும் மக்கள் தொகையின் விகிதத்தில், இந்தியாவுக்கு அடுத்தபடியாக மெக்சிகோ இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நாட்டில் கிட்டதட்ட 19% மக்கள் சைவ உணவுகளை உண்கிறார்கள். காலப்போக்கில், உடல்நலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் அதிகமானோர் தாவர அடிப்படையிலான உணவு முறையைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர். மக்காச்சோளம், பீன்ஸ், தக்காளி மற்றும் மிளகாய் ஆகியவை மெக்சிகோவில் பொதுவாக பின்பற்றப்படும் தாவர வகை உணவுகளாகும்.
பிரேசில்
பிரேசில் இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. பிரேசிலின் மக்கள் தொகையில் 14% பேர் சைவ உணவு உண்பவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். இறைச்சிக்கு பெயர் பெற்ற நாடாக இருந்தாலும், அண்மைக்காலமாக அங்கு சைவ உணவு முறை குறிப்பிடத்தக்க அளவில் பிரபலமடைந்து வருகிறது.
தைவான்
தைவான் மக்கள் தொகையில் 12 முதல் 14 சதவீதத்திற்கும் அதிகமானோர் சைவ உணவைப் பின்பற்றுவதால், சைவ உணவுப் பழக்கத்தில் உலகளவில் தைவான் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த நாட்டின் முக்கிய மதங்களில் ஒன்றான பௌத்தம், எளிமையான தாவர அடிப்படையிலான உணவு வகைகள் பிரபலமாக இருப்பதற்கு காரணமாக உள்ளது. தைவானில் சைவ உணவுகள் பொதுவாக சோயா சார்ந்த புரதங்கள், காளான்கள் மற்றும் புதிய காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
இஸ்ரேல்
தைவானுக்கு அடுத்தபடியாக இஸ்ரேல் அடுத்த இடத்தில் உள்ளது. இந்த நாட்டில் 13%-க்கும் அதிகமான மக்கள் சைவ உணவுமுறையை பின்பற்றுகின்றனர். அந்நாட்டில் தாவர அடிப்படையிலான உணவுமுறை மிகவும் பிரபலமாகி வருகின்றன. ஹம்முஸ் (hummus), ஃபலாஃபெல் (falafel), தஹினி (tahini), சாலட் வகைகள் மற்றும் பருப்பு சார்ந்த உணவுகள் போன்ற இயற்கையாகவே இங்கு பரவலாக உண்ணப்படுகின்றன.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் சுமார் 12.1% மக்கள் சைவ உணவைப் பின்பற்றுவதால், இங்கு சைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆரோக்கியம், விலங்குகள் நலன் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதையே இந்தப்போக்கு பிரதிபலிக்கிறது. இதனால் அந்நாட்டு மக்களிடையே சைவ உணவு ஒரு பிரபலமான தேர்வாக மாறியுள்ளது.
அர்ஜென்டினா
அர்ஜென்டினாவில் 12% அளவிலான மக்கள் சைவ உணவைப் பின்பற்றுகின்றனர். தற்போது, தாவர அடிப்படையிலான உணவை உட்கொள்வதில் அதிக மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.; மேலும், நாடு முழுவதும் சைவ உணவுக்கான வாய்ப்புகளும் பெருகி வருகின்றன.
சுவீடன்
இந்த நாட்டில் 12% மக்கள் சைவ உணவு முறையை பின்பற்றுகிறார்கள். ஸ்வீடனில் உள்ள சைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை, அந்நாடு 'நிலையான வாழ்வியல்' கோட்பாட்டிற்கு அளிக்கும் முக்கியத்துவத்துடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது. கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான ஒரு வழியாக சைவ உணவு முறை பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது.
பின்லாந்து
ஸ்வீடனைப் போலவே பின்லாந்திலும் உணவுமுறையில் ஒரு மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அங்கு உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் தாவர அடிப்படையிலான உணவுமுறை பிரபலமடைந்து வருகிறது. பொது உணவுமுறைக் கொள்கைகள் இறைச்சி நுகர்வைக் குறைப்பதை ஊக்குவிக்கின்றன, மேலும் உணவு வேளைகளில் தாவர அடிப்படையிலான உணவுகள் அதிக அளவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
ஆஸ்திரியா
11% சைவ உணவு உண்பவர்களைக் கொண்ட ஆஸ்திரியா, பத்தாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரிய உணவுகள் பொதுவாக இறைச்சியை மையமாகக் கொண்டவையாக இருந்தாலும், தற்கால உணவுப் போக்குகள் இறைச்சி உண்பதைக் குறைத்து சைவ உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.



Click it and Unblock the Notifications

