Latest Updates
-
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா?
பன்னீரும், முட்டையும் இருக்கா? அப்ப இப்படி இட்லி சுட்டு சாப்பிடுங்க...
Paneer Mutta Idli Recipe In Tamil: இரவு டின்னர் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் லைட் ஃபுட் கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் முட்டையும், பன்னீரும் உள்ளதா? அப்படியானால் அந்த முட்டையையும், பன்னீரையும் கொண்டு இட்லி சுடுங்கள். இந்த பன்னீர் முட்டை இட்லிக்கு சைடு டிஷ் எதுவும் தேவையில்லை.
மேலும் இந்த பன்னீர் முட்டை இட்லி செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். குறிப்பாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு அட்டகாசமான ருசியில் இருக்கும். இந்த பன்னீர் முட்டை இட்லியை காலை வேளையிலும் தயாரித்து சாப்பிடலாம். இது நல்ல புரோட்டீன் நிறைந்த உணவு.

உங்களுக்கு பன்னீர் முட்டை இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் முட்டை இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துருவிய பன்னீர் - 1/2 கப்
* முட்டை - 2
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1/4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு
அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் துருவிய பன்னீர், துருவிய தேங்காய், மஞ்சள் தூள்,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு
சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி, முட்டை கலவையுடன் சேர்த்து நன்கு
கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு
நீரை கொதிக்க வைக்க வேண்டும்.
* அதற்குள் இட்லி தட்டில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள கலவையை
ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து
இறக்கினால், சுவையான பன்னீர் முட்டை இட்லி தயார்.
Image Courtesy: FoodGood



Click it and Unblock the Notifications
