Latest Updates
-
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
நார்த் கர்நாடகா தேங்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
வெங்காயம், தக்காளி இருந்தா போதும்.. இப்படி குருமா செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
தங்கத்தை விட 20 மடங்கு விலையுயர்ந்த உலோகம் எது தெரியுமா? இதை வைத்து என்னென்ன செய்றாங்க தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
18 மாதங்களுக்கு பின் கடக ராசிக்குள் நுழையும் கேது: இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம் -
ஓணம் ஸ்பெஷல் பழ நுருக்கு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
தினமும் காலையில் 2 கிராம்பை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! -
சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் கோலாப்பூரி பச்சை பயறு குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
இதயம் ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் 5 அறிகுறிகள் - ஜாக்கிரதையா இருங்க
இதய அடைப்புகள் என்பது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் தீவிரமான பிரச்சினையாக மாறிவருகிறது. இதய அடைப்புகள் தீவிரமடையும் போது அது மாரடைப்பை ஏற்படுத்தலாம் அல்லது இதயச் செயலிழப்புக்குக்கூட வழிவகுக்கலாம். இதயத்தின் செயல்பாடுகளை நிர்வகிக்கும் அமைப்புகள் சேதமடையும்போது இதய அடைப்பு ஏற்படுகிறது.
இந்த மருத்துவ நிலை கரோனரி தமனி நோய் என்றும் அழைக்கப்படுகிறது; இது இதயத்திற்கு இரத்தத்தை விநியோகிக்கும் கரோனரி தமனிகளைப் பாதிக்கிறது. இதயத் தசைகளுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறையும்போது, அது இதயத்தின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இதய அடைப்பு என்பது பொதுவாக, தமனிச் சுவர்களில் கொலஸ்ட்ரால் மற்றும் பிற பொருட்கள் படிந்து சேர்வதால் ஏற்படுகிறது. இந்த செயல்முறை 'அதிரோஸ்கிளிரோசிஸ்' என்று அழைக்கப்படுகிறது.

இந்த கொழுப்பு படிவு காலப்போக்கில் தமனிகளைச் சுருங்கச் செய்கிறது. இதயத்திற்கு இரத்தம் செல்வது தடைபடும் போது அதற்கான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. ஒரு தமனி முழுமையாக அடைபடும்போது, அது மாரடைப்பிற்கு வழிவகுக்கிறது. உலகளவில் அதிகளவு மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில், இதய நோய்களே முதன்மையான காரணமாகத் திகழ்வதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவிக்கிறது. உங்களுக்கு இதய அடைப்பு ஏதேனும் இருந்தால், நீங்கள் கவனிக்க வேண்டிய சில முக்கிய அறிகுறிகள்என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஓய்வெடுத்தப் பிறகும் சோர்வாக இருப்பது
இதன் முதல் அறிகுறி தொடர்ச்சியான சோர்வாகும். போதுமான அளவு ஓய்வெடுத்த பிறகும், வழக்கத்திற்கு மாறான சோர்வை நீங்கள் சோர்வாக உணர்ந்தால் அதை புறக்கணிக்கக் கூடாது. உங்கள் இதயம் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி, ஆக்சிஜன் செறிந்த இரத்தத்தை உடல் முழுவதும் பாய்ச்சுவதற்காகக் கடுமையாக உழைப்பதால் இந்த சோர்வு ஏற்படுகிறது.
மூச்சுத்திணறல்
இரண்டாவது அறிகுறி மூச்சுத் திணறலாகும். இதயம் சரியாகச் செயல்படாமல் இருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகளில் இதுவும் ஒன்றாகும். இதயத்தின் இரத்தத்தை விநியோகிக்கும் திறன் பலவீனமடையும்போது, இரத்தம் நுரையீரல்களுக்குள் பின்னோக்கித் தேங்கக்கூடும். இதனால் மூச்சு விடுவதில் தேக்கம் ஏற்படும்.
திடீர் தலைச்சுற்றல், குமட்டல் அல்லது வயிறு உப்புசம்
திடீர் தலைச்சுற்றல், குமட்டல் அல்லது வயிறு உப்புசம் ஆகியவை சைலன்ட் ஹார்ட் அட்டாக்கின் ஓர் அறிகுறியாக இருக்கலாம். இரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு நரம்பு மண்டலம் வினைபுரியும்போது, இந்த அறிகுறிகள் வெளிப்படுகின்றன. மக்கள் பெரும்பாலும் இவற்றை புட் பாய்சனிங், நீர்ச்சத்து குறைபாடு அல்லது வைரஸ் தொற்று எனத் தவறாகக் கருதுகின்றனர். இதனால் இதய நோய் தீவிரமடையும் போது கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
தூங்குவதில் சிக்கல்
தூங்குவதில் சிக்கல் அல்லது பதற்றம் அதிகரிப்பதும் இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். நோயாளிகள் திடீரென்று அமைதியின்மையையும் பதற்றத்தையும் உணரத் தொடங்கலாம். மாரடைப்பு மற்றும் இரத்த ஓட்டத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து உங்களை எச்சரிப்பதற்காக, உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகளே இவை ஆகும்.
மார்பில் வலி
அனைத்திற்கும் மேலாக அடிக்கடி மார்பு அசௌகரியம் ஆகும். இது மாரடைப்பின் ஓர் அறிகுறியாகும். மக்கள் பெரும்பாலும் இந்த அறிகுறியை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை, ஏனெனில் அவர்கள் மாரடைப்பைத் தொடர்ச்சியான, கடுமையான மார்பு வலியுடன் தொடர்புபடுத்தி, இந்த அசௌகரியத்தை ஒரு செரிமானப் பிரச்சினையாகத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
