Latest Updates
-
1/4 கிலோ வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா செஞ்சு பாருங்க - இதுவரை நீங்க சாப்பிடாத சுவையில் இருக்கும் -
வாஸ்துப்படி துளசி செடிகிட்ட இந்த செடிகளை வளர்க்காதீங்க.. இல்ல பண இழப்பு தான் அதிகரிக்கும்.. -
இறந்தவர்களின் மூக்கு மற்றும் காதில் ஏன் பஞ்சு வைக்கப்படுகிறது? கருட புராணம் சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மகாளய அமாவாசைக்கு கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவலை எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பாருங்க.. -
செட்டிநாடு சைவ மீன் குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - ஒரிஜினல் மீன் குழம்பே தோத்துரும் -
World Sight Day 2026: சுகர் இருக்கா? அப்ப கண் பிரச்சனையை அசால்ட்டா விடாதீங்க.. எச்சரிக்கும் கண் டாக்டர்! -
துலாம் ராசியில் வக்ரமாகும் புதன்: அக்டோபர் இறுதியில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
முதல் உலகப்போரின் ஹீரோவாக விளங்கிய நாய் - அந்த நாய் அப்படி என்ன செய்தது தெரியுமா? -
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்..
சீரக நீர் Vs சியா விதை நீர் - இவற்றில் உடல் எடையை குறைக்க சிறந்தது எது?
Jeera Water vs Chia Seeds Water: உடல் பருமன் என்பது தற்போது உலகளவில் ஏராளமானோர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். சொல்லப்போனால் தற்போது சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளால் சிரமப்படுவதற்கு இந்த உடல் பருமனும் ஒரு முக்கிய காரணமாகும். இப்படி அதிகரித்த உடல் எடையை ஒருவர் குறைக்க முயற்சிக்காமல் இருந்தால், அதன் விளைவாக பல ஆரோக்கிய பிரச்சனைகளை மட்டும் தான் பரிசாக பெற முடியும்.

எனவே நீங்கள் உங்கள் எடையைக் குறைக்க நினைத்தால், தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதோடு, நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்பதுடன், வாழ்க்கை முறையையும் வாழுங்கள். அதுவும் தற்போது பலரும் இயற்கை வழியில் உடல் எடையைக் குறைக்க நினைக்கின்றனர்.
இதற்கு நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களே நல்ல பலனைத் தரும். அதில் எடையைக் குறைக்க பலரால் அருந்தப்படும் இரண்டு பானங்கள் உள்ளன. அவை தான் சீரக நீரும், சியா விதை நீரும். ஆனால் இவற்றில் உடல் எடையைக் குறைக்க எது மிகவும் சிறந்தது என்பது தெரியுமா? அதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
ஊட்டச்சத்து மதிப்பு
சீரக நீர்
* சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளன.
* முக்கியமாக செரிமானத்தைத் தூண்டும் அத்தியாவசிய எண்ணெய்கள் அதிகமாக உள்ளன.
* மேலும் சீரகத்தில் கலோரிகள் குறைவாக உள்ளன.
சியா விதை நீர்
* சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாகவும், நார்ச்சத்து மற்றும் தாவர வகை புரோட்டீனும் உள்ளன.
* அதோடு சியா விதைகளில் கால்சியம், மக்னீசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவையும் நிறைந்துள்ளன.
* சியா விதைகளை நீரில் ஊற வைக்கும் போது, அவை விரிவடைவதால், அவற்றை உட்கொள்ளும் போது வயிறு நிரம்பிய உணர்வு எழுகிறது.
எடை இழப்பில் சீரக நீரின் நன்மைகள்
* சீரக நீரை குடிக்கும் போது உடலின் மெட்டபாலிசம் இயற்கையாகவே அதிகரிக்கிறது.
* வயிற்று உப்புசம் குறைந்து, செரிமானம் மேம்படுகிறது.
* இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
எடை இழப்பில் சியா விதை நீரின் நன்மைகள்
* சியா விதைகளில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியிருக்க செய்து, கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தை குறைக்கிறது.
* இந்த விதைகளில் உள்ள புரோட்டீன் எடை இழப்பின் போது தசைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது.
* குறிப்பாக இது பசியைக் கட்டுப்படுத்தி, எடை இழப்பு நோக்கத்தை அடைய உதவுகிறது.
எப்போது குடிக்கலாம்?
* சீரக நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதுதவிர நாள் முழுவதும் வெறும் நீருக்கு பதிலாக, சீரக நீரைக் குடிக்கலாம்.
* சியா விதை நீரை காலை உணவுக்கு பின், காபி அல்லது டீ குடிக்கும் சமயத்தில் குடிக்கலாம். இதனால் பசி கட்டுப்பட்டு, ஜங்க் உணவுகளின் மீதான நாட்டம் குறையும்.
உடல் எடையைக் குறைக்க எது சிறந்தது?
* உங்களின் இலக்கு செரிமானத்தையும், மெட்டபாலிசத்தையும் மேம்படுத்துவதாக இருந்தால், சீரக நீரைத் தேர்ந்தெடுத்து குடிக்கலாம்.
* அதுவே நீங்கள் வயிறு நிறைந்த உணர்வைப் பெறுவதையும் நீண்ட கால அடிப்படையில் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைப்பதையும் விரும்பினால், அதிக நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் நிறைந்த சியா விதை நீரை குடியுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
