Latest Updates
-
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள்
சீரக நீர் Vs மல்லி நீர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது?
வீட்டு வைத்தியத்தில் எடை இழப்பு பற்றி பேசுகையில், அதில் இரண்டு எளிய வைத்தியங்கள் உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும். அவை சீரக நீர் மற்றும் மல்லி நீர்.
உடல் பருமனால் கஷ்டப்படுபவர்கள் அதைக் குறைப்பதற்காக கடுமையான டயட்டை மேற்கொள்வார்கள். சில சமயங்களில் கடுமையான டயட் சலிப்பை உண்டாக்கிவிடும். அந்த மாதிரியான நேரத்தில் எடை இழப்புக்கான வேறு வழி என்றால் அது எளிய வீட்டு வைத்தியங்கள் தான். பொதுவாக வீட்டு வைத்தியங்கள் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல், எளிதில் வீட்டிலேயே தயாரிக்கக்கூடியது மற்றும் மலிவானதும் கூட. பெரும்பாலும் நாம் அன்றாடம் சந்திக்கும் சில வலிகள் மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு கை வைத்தியங்களைத் தான் முதலில் மேற்கொள்வோம்.

அந்த வகையில் வீட்டு வைத்தியத்தில் எடை இழப்பு பற்றி பேசுகையில், அதில் இரண்டு எளிய வைத்தியங்கள் உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும். அவை சீரக நீர் மற்றும் மல்லி நீர். இந்த இரண்டுமே அன்றாட சமையலில் பயன்படுத்தப்படுத்த ஓர் முக்கியமான மூலப்பொருள். இந்த இரண்டு விதைகளும் செரிமானத்தை மேம்படுத்துவதில் இருந்து, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பது வரை பல பிரச்சனைகளை தீர்க்க வல்லது.
இக்கட்டுரையில் நாம் காணப் போவது, சீரக நீர், மல்லி நீர்- இந்த இண்டில் உடல் எடையைக் குறைக்க சிறந்த பானம் எது என்பதைப் பற்றி தான். வாருங்கள் பார்ப்போம்.

சீரக நீர்
சீரக விதைகள் நீரில் சில மணிநேரம் ஊற வைக்கும் போது கிடைப்பது தான் சீரக நீர். சீரக விதைகளை நீரில் ஊற வைக்கும் போது, சவ்வூடுபரவல் செயல்முறை மூலம் நீர் விதைகளுக்குள் நுழைகிறது. இவ்வாறு நுழையும் போது, சீரகம் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நீரில் வெளியிட்டு, நீரை வெளிரிய மஞ்சள் நிறத்தில் மாற்றுகிறது.

சீரக நீரின் நன்மைகள்:
கலோரிகள் குறைவு
ஒரு டீஸ்பூன் சீரகத்தில் வெறும் 7 கலோரிகள் தான் உள்ளன. ஆகவே நீங்கள் ஒரு டம்ளர் சீரக நீரைக் குடிக்கும் போது, உடலில் மிகவும் குறைவான அளவில் தான் கலோரிகள் அதிகரிக்கும்.

சிறப்பான செரிமானம்
சீரக நீர் குடலியக்கத்தை மேம்படுத்துவதோடு, செரிமானத்திற்கு உதவும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இந்த சீரக நீர் ஒருவித நொதியை சுரக்கிறது. இது சர்க்கரை, கொழுப்புக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுக்களை உடைக்க உதவி புரிந்து, குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. ஒருவரது செரிமான மண்டலம் சிறப்பாக இருந்தால், உடல் எடையை சிறப்பாக குறைக்கலாம் என்பதை அனைவரும் அறிவோம். ஏனெனில் நல்ல செரிமானம், உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

கொழுப்பு எரிக்கப்படும்
சீரக விதைகள் உடலில் கொழுப்புக்களை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகின்றன. இதனால் இந்த விதைகளை நீரில் ஊற வைத்து குடிக்கும் போது, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் எரிக்கப்பட்டு, உடல் எடை வேகமாக குறையும்.

பசியைக் கட்டுப்படுத்தும்
உடல் எடையைக் குறைக்க நினைப்போரால், தங்களது இலக்கை எட்ட முடியாததற்கு ஒரு காரணமாக இருப்பது, அவர்களது பசியைக் கட்டுப்படுத்த முடியாதது தான். அதிலும் எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும் போது தான் பசி மேலும் அதிகரிக்கும். ஆனால் சீரக நீரைக் குடிக்கும் போது, பசி உணர்வு கட்டுப்படுத்தப்பட்டு, நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்க வைக்கிறது மற்றும் ஜங்க் உணவுகள் உண்பதைத் தடுக்கிறது.

உடலை சுத்தம் செய்யும்
சீரக நீர் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது மற்றும் உடலில் புதிய மற்றும் ஆரோக்கியமான செல்களை உற்பத்தி செய்ய அனுமதிக்கிறது.

மல்லி நீர்
மல்லி நீர் தயாரிப்பது மிகவும் எளிது. ஒரு டீஸ்பூன் மல்லி விதைகளை ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் அந்நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். முக்கியமாக நீரில் ஊற வைத்த விதைகளை தூக்கி எறிய வேண்டாம். அவற்றை சமையலில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மல்லி நீரின் நன்மைகள்:
நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
தற்போது நாம் அனைவரும் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதற்கு மல்லி நீர் பெரிதும் உதவியாக இருக்கும். மல்லியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ரீ-ராடிக்கல்களின் செயல்பாட்டைக் குறைக்க உதவுகிறது. இதனால் உங்கள் நோயெதிர்ப்பு சக்தி மேம்படுவதோடு, எடையையும் குறைக்க உதவுகிறது.

செரிமானத்திற்கு உதவும்
நல்ல செரிமானம் ஒரு வெற்றிகரமான எடை இழப்பு பயணத்தின் முதல் படியாகும். மல்லி விதைகளில் செரிமான பண்புகள் உள்ளது மற்றும் செரிமான பிரச்சனைகளைப் போக்கும் பல மருந்துகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

நச்சுக்களை நீக்கும்
சீரக நீரைப் போன்றே, மல்லி நீரும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். ஒரு டம்ளர் மல்லி நீரை தினமும் காலையில் குடிப்பதால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

பசியுணர்வைக் குறைக்கும்
தினமும் காலையில் ஒரு டம்ளர் மல்லி நீரைக் குடிப்பது, பசியுணர்வைக் கட்டுப்படுத்தி, அதிக உணவு உண்பதைத் தடுக்க உதவும். எனவே உடல் பருமன் கொண்டவர்கள் மல்லி நீரைக் குடித்தால், கண்ட உணவுகளின் மீதுள்ள பிரியம் குறைந்து, உடல் எடையையும் எளிதில் குறைக்கலாம்.

முடிவு
மல்லி மற்றும் சீரக நீர் இரண்டுமே உடல் எடையில் மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கித்தையும் மேம்படுத்தும் சத்துக்களை உள்ளடக்கியவை. இவை இரண்டுமே ஒரே மாதிரியான நன்மைகளைத் தருகின்றன. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன.
ஆகவே நீங்கள் இவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம் அல்லது ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி சீரக நீரைக் குடித்து அலுத்துப் போயிருந்தால் ஒரு மாற்றத்திற்காக மல்லி நீரைக் குடிக்கலாம்.



Click it and Unblock the Notifications