Latest Updates
-
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்! -
சிங்கப்பூர் வெஜ் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ரைஸ் செஞ்சா இனிமே ஹோட்டல் பக்கமே போகமாட்டிங்க -
அக்டோபரில் உருவாகியுள்ள லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு பணம் சம்பாதிக்க புதிய வழி கிடைக்கும்! -
சிப்ஸ் பாக்கெட்களில் ஏன் சிப்ஸை விட காற்று அதிகமாக உள்ளது தெரியுமா? அது சாதாரண காற்றே இல்லையாம்
நாளை நடக்கும் எம நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தலைவிதி மாறும், செல்வம் பெருகும்..
Yama Transit In Uthiraadam Nakshatra On 13 July 2026: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. ஆனால் இதில் எம பகவான் இடம் பெறவில்லை. ஆயினும் சில ஜோதிட நம்பிக்கைகளின் படி, எம கிரகமும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதுவும் ஜோதிடத்தின் படி, புளூட்டோ எம கிரகமாக கருதப்படுவதோடு, அசுபமான விளைவுகளைத் தரக்கூடிய கிரகமாகவும் கருதப்படுகிறது.

இப்படிப்பட்ட யம கிரகம் மற்ற கிரகங்களைப் போன்று குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். அந்த வகையில் ஜூலை 13 ஆம் தேதி யம பகவான் உத்திராடம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.
இந்த நட்சத்திரத்தின் அதிபதி சூரியன். யமன் சூரியனின் நட்சத்திரத்திற்கு செல்வதால், சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது யமனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
யமனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கடகம்
யமனின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். வியாபாரிகளுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
கன்னி
யமனின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் பல வழிகளில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். மன அழுத்தம் குறைந்து, மன நிம்மதி அதிகரிக்கும்.
விருச்சிகம்
யமனின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். மாணவர்கள் தேர்வுகளில் பெரிய அளவில் வெற்றியைப் பெறுவார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். திருமண வாழ்வில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து, தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


