Latest Updates
-
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா?
உங்களுக்கு வெற்றி, பணம் குவியணுமா? அப்ப சாணக்கியர் கூறும் இந்த 4 காலை பழக்கங்களை வெச்சுக்கோங்க..
Chanakya Niti: நாம் ஒவ்வொருவருமே வாழ்வில் நல்ல வெற்றி பெறவும், பணத்தை சம்பாதிக்கவும், நல்ல அந்தஸ்து மற்றும் கௌரவத்துடன் வாழ விரும்புவோம். இவை அனைத்தையும் பெறுவதற்காக கடினமாகவும் உழைப்போம். ஆனால் வெறும் கடின உழைப்பு மட்டும் அனைத்தையும் தந்துவிடாது, ஒருவரது பழக்கங்களும் தான் முக்கிய பங்கை வகிக்கும்.

ஆச்சார்ய சாணக்கியர் தனது நூலான சாணக்கிய நீதியில் வாழ்க்கையில் உயரத்தை அடைய சில பயனுள்ள விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். அவரைப் பொறுத்தவரை, ஒரு நாளை தொடங்கும் விதத்தைப் பொறுத்து, அந்நபருக்கு வாழ்வில் வெற்றி, பணம், புகழ் வந்து சேரும்.
அதுவும் காலையில் எழுந்ததும் குறிப்பிட்ட பழக்கங்களை ஒருவர் தவறாமல் பின்பற்றும் போது, வெற்றி, முன்னேற்றம், தன்னம்பிக்கை போன்றவை தானாகவே அதிகரிக்கும். இப்போது சாணக்கியரின் கூற்றுப்படி, வாழ்வில் நல்ல வெற்றி பெறவும், பணத்தை சம்பாதிக்கவும் காலையில் எழுந்ததும் ஒருவர் பின்பற்ற வேண்டிய 4 விஷயங்கள் என்னவென்பதைக் காண்போம்.
1. சூரிய உதயத்திற்கு முன் எழவும்
சாணக்கியரின் கூற்றுப்படி, இரவு தாமதமாக தூங்கும் பழக்கம் ஒருவரது முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கலாம். அதிகாலையில் வேகமாக எழும் ஒருவருக்கு அன்றைய தினம் அதிக நேரம் கிடைக்கும். இதனால் அவசரப்படாமல் திட்டமிட்ட படி வேலையை முடிக்க முடியும். ஏனெனில் அதிகாலை வேகமாக எழும் போது உடல் புத்துணர்ச்சியாகவும், மனம் அமைதியாகவும் இருக்கும். இதன் விளைவாக வேலை செய்வதற்கான ஆற்றலும் கிடைக்கும். மேலும் மனம் அமைதியாக இருப்பதால், நேர்மறை எண்ணங்கள் நிறைந்து வேலையை செய்வீர்கள். இதன் மூலம் செய்யும் வேலையில் வெற்றி கிடைக்கும்.
2. அன்றைய நாளை திட்டமிடவும்
காலையில் எழுந்ததும், அன்று செய்யக்கூடிய வேலைகள் என்ன, எந்த வேலையை முதலில் செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று திட்டமிட வேண்டும். இப்படி தெளிவாக யோசித்து திட்டமிட்டு வேலை செய்யும் போது, வேலையில் குழப்பம் ஏற்படாது, நேரமும் மிச்சமாகும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
3. நேரத்தை மதிக்கவும்
சாணக்கியரின் கூற்றுப்படி, வாழ்வில் நேரத்தை மதிப்புமிக்க சொத்ததாக கருத வேண்டும். நேரம் பொன் போன்றது. நேரம் சென்றுவிட்டால், அது திரும்ப வராது. எனவே ஒவ்வொரு நொடியையும் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். எனவே திட்டமிட்டு ஒவ்வொரு வேலையையும் சரியான நேரத்தில் செய்து முடிக்க பாருங்கள். முக்கியமாக எந்த வேலையையும் தள்ளிப் போடும் பழக்கத்தை கைவிடுங்கள். ஏனெனில் வேலையை தள்ளிப் போடுபவர் பல வாய்ப்புக்களை இழக்கிறார். நேரத்தை சரியாக நிர்வகிக்கும் போது, அவர் வெற்றி பெறுவது மட்டுமின்றி, சமூகத்தில் மரியாதைக்குரிய இடத்தை பெறுவார்.
4. ஆரோக்கியத்தை பேணவும்
சாணக்கியரின் கூற்றுப்படி, உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் எந்த ஒரு இலக்கையும் அடைய முடியும். ஆரோக்கியத்தை புறக்கணித்தால், அது நோய்களுக்கு வழிவகுப்பதோடு, வேலையிலும், ஒட்டுமொட்ட வாழ்க்கை தரத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்திவிடும். எனவே அதிகாலையில் எழுந்ததும் ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுங்கள். அதோடு, சமச்சீரான உணவை உட்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
