Latest Updates
-
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க..
Natural Facial Hair Removal Tips In Tamil: சில பெண்களுக்கு முகத்தில் அசிங்கமா முடி வளரும். இப்படி வளரும் முடியைப் போக்க பல பெண்கள் அழகு நிலையங்களுக்கு சென்று வேக்சிங் செய்வார்கள். ஆனால் வேக்ஸிங் மிகுந்த வலியை ஏற்படுத்தும் என்பதால் சில பெண்கள் இதற்கான மாற்று வழியை தேடுவார்கள். தற்போதைய மார்டன் உலகில் சருமத்தில் வளரும் தேவையில்லாத முடிகளை அகற்றுவதற்கு ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் ட்ரிம்மர்கள், ரேசர்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் இவற்றை பயன்படுத்தினால் முடி வளர்ச்சி இன்னும் அதிகரித்துவிடுமோ என்ற பயத்தினால் பல பெண்களும் இவற்றை பயன்படுத்த யோசிப்பார்கள். உங்களுக்கும் அப்படியான பயம் இருந்தால், நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடுங்கள். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் வளரும் முடியின் வளர்ச்சியைக் குறைக்க உதவி புரியும். அதோடு இந்த ஃபேஸ் பேக்குகள் சருமத்திற்கு நல்ல பொலிவையும் தரும். இப்போது முகத்தில் வளரும் தேவையில்லாத முடியை நீக்க உதவும் நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
1. கோதுமை மாவு, மஞ்சள் மற்றும் நெய் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் கோதுமை மாவு, சிறிது மஞ்சள் தூள் மற்றும் நெய் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, சிறிது நேரம் மென்மையாக ஸ்க்ரப் செய்து, ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி ஸ்க்ரப் செய்து கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர, நல்ல மாற்றத்தைக் காணலாம்.
2. கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி காய வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 4 முறை பயன்படுத்த, நல்ல பலன் கிடைக்கும்.
3. தேன் மற்றும் சர்க்கரை
* இதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை அடுப்பில் வைத்து, சர்க்கரையை கரைத்து இறக்கி, வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும், முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, சிறிது நேரம் காய வைத்து, பின் உரித்து எடுக்க வேண்டும்.
4. உருளைக்கிழங்கு ஜூஸ், பச்சை பயறு மாவு மற்றும் எலுமிச்சை சாறு
* இதற்கு ஒரு பௌலில் பச்சை பயறு மாவை எடுத்து, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் உருளைக்கிழங்கு சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது தேனை சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்க்ரப் செய்து காய வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர சிறந்த பலன் கிடைக்கும்.
5. பப்பாளி மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
* இதற்கு நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications