Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
ஆண்களே! சரும நிறத்தை அதிகரிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை போடுங்க..
Face Packs For Men In Tamil: தற்போது சுட்டெரிக்கும் வெயிலாலும், மாசடைந்த சுற்றுச்சூழல் மற்றும் தூசிகளாலும் சருமம் பொலிவிழந்து, கருமையாகவும், நிறைய முகப்பருக்கள் தோன்றும் நிலைக்கும் ஆளாகலாம். இந்நிலையில் சருமத்திற்கு போதுமான பராமரிப்பைக் கொடுக்க வேண்டியது அவசியம். அப்படி கொடுத்தால் தான், முகம் பளிச்சென்று பிரகாசமாகவும், பொலிவோடும் இருக்கும்.

பொதுவாக சரும பராமரிப்பு என்று வரும் போது பெண்கள் சிறப்பாக செய்வார்கள். ஆனால் ஆண்களோ அப்படி இல்லை. சொல்லப்போனால் நிறைய ஆண்கள் தங்கள் சருமத்திற்கு என்று தனியாக நேரம் ஒதுக்கி பராமரிப்பு கொடுப்பதில்லை. இதன் விளைவாக ஆண்கள் கருப்பாக காட்சியளிப்பதோடு, முகப்பரு பிரச்சனைகளையும் அதிகம் சந்திக்கின்றனர்.
சருமத்தை சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள ஃபேஸ் பேக்குகள் பெரிதும் உதவி புரியும். இந்த ஃபேஸ் பேக்குகளை பெண்கள் தான் போட வேண்டும் என்பதில்லை, ஆண்களும் பயன்படுத்தலாம். பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களின் சருமம் சற்று கடினமாகவும் அதிக எண்ணெய் பசையுடனும் இருக்கும். எனவே, அதற்கு கூடுதல் கவனிப்பும் பராமரிப்பும் தேவைப்படுகிறது.
அதுவும் வீட்டின் சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடும் போது முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். கீழே ஆண்களின் சரும நிறத்தை அதிகரிக்கும் மற்றும் சரும பொலிவை மேம்படுத்தும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ஆரஞ்சு மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தேனை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் ஆரஞ்சு சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சரும நிறத்தை மேம்படுத்த உதவும்.
2. தயிர், கற்றாழை மற்றும் ஆரஞ்சு ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத் துளைகளை இறுக்கமடையச் செய்யும் மற்றும் சருமத்தை சுத்தம் செய்யும்.
3. கடலை மாவு மற்றும் கரும்பு ஜூஸ் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கரும்பு சாற்றினை எடுத்து, அத்துடன் சிறிது கடலை மாவை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4.வேப்பிலை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் வேலைப்பிலை பொடியை எடுத்து, அத்துடன் சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம்.
5. வாழைப்பழம் மற்றும் பப்பாளி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் பப்பாளி மற்றும் வாழைப்பழத்தை எடுத்து, மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


