Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
முகம் பளிச்சுன்னு பிரகாசமா இருக்கணுமா? அப்ப வெறும் 2 பொருட்களை கொண்ட 'இந்த ஃபேஸ் பேக்' போடுங்க..
Summer Skin Care Tips In Tamil: யாருக்கு தான் பொலிவான, அழகான சருமத்தைப் பெற ஆசை இருக்காது. அதுவும் தற்போதைய கொளுத்தும் கோடையில் சரும அழகை பாதுகாப்பது என்பது சவாலானதாக உள்ளது. ஏனெனில் எவ்வளவு தான் சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர், சன் ஸ்க்ரீன் என்று பயன்படுத்தினாலும், ஒருமுறை வெளியே சென்றுவிட்டு வந்தாலே, சரும நிறம் மாறிவிடுகிறது. அந்த அளவில் வெயில் கொளுத்துகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சருமத்திற்கு க்ரீம்களையும், லோசன்களையும் கொண்டு பராமரிப்பு கொடுப்பது மட்டுமின்றி, இரவு நேரத்தில் அவ்வப்போது சருமத்தை குளிர்விக்கும் வகையில் ஒருசில ஃபேஸ் பேக்குகளை போட்டு வந்தால், சரும நிறமும் மாறாமல் இருக்கும், முகமும் பளிச்சென்று பிரகாசமாகவும் பொலிவோடும் இருக்கும். கீழே கோடையில் முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்க உதவும் சில 2 பொருட்களைக் கொண்ட ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி வந்தால், ஒரு நல்ல மாற்றத்தை சருமத்தில் காணலாம்.
1. தேன் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேனுடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் முகத்திற்கு உடனடி பொலிவைத் தருவதோடு, புத்துணர்ச்சியையும் அளிக்கும்.
* சிறந்த பலனைப் பெற, இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தலாம்.
2. மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10-12 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இன்னும் சிறப்பான பலனைப் பெற, கற்றாழையுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, சில நிமிடங்கள் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்துங்கள்.
4. கடலை மாவு மற்றும் பால் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி, மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* எண்ணெய் பசை சருமத்தினர் பாலுக்கு பதிலாக ரோஸ் வாட்டரைப் பயன்படுத்தலாம்.
5. வாழைப்பழம் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த பாதி வாழைப்பழத்தை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
6. ஓட்ஸ் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடரை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, மென்மையான 1-2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை நீக்கி, முகத்திற்கு பொலிவைத் தரும்.
7. பப்பாளி மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த பப்பாளி துண்டை எடுத்து மசித்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* சிறந்த பலனைப் பெற இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications



