Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க...
Summer Skin Care Tips In Tamil: வெயில் காலம் தொடங்கிவிட்டது. வெளியே சென்றால் சருமம் பொசுங்கும் அளவில் வெயில் கொளுத்துகிறது. மற்ற காலங்களை விட வெயில் காலத்தில் சருமத்தில் பலவிதமான பிரச்சனைகளை பலர் சந்திப்பார்கள். குறிப்பாக வெளியே அதிகம் சுற்றினால், அடையாளம் தெரியாத அளவில் நிறம் மாறி காட்சியளிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதைத் தவிர்க்க வேண்டுமானால் வெயில் காலத்தில் சருமத்திற்கு போதுமான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். குறிப்பாக சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் சருமத்தை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் கற்றாழை ஜெல்லைக் கொண்டு பராமரிப்பு கொடுத்து வந்தால், சருமம் கருமையாவதைத் தடுக்கலாம்.

அதுவும் கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் ஃபேஸ் பேக் போட்டு வந்தால், எப்போதும் பளபளவென்று பொலிவோடு காட்சியளிக்கலாம். இப்போது வெயிலால் முகம் கருமையாகாமல் இருக்க போட வேண்டிய சில கற்றாழை ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
ஃபேஸ் பேக் #1
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும்.
ஃபேஸ் பேக் #2
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வதோடு, கருமையாவதையும் தடுக்கும்.
ஃபேஸ் பேக் #3
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இது சருமம் கருமையாவதைத் தடுக்கும்.
ஃபேஸ் பேக் #4
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் வெயிலால் சருமம் நிறம் மாறுவதைத் தடுத்து, சருமத்தை பொலிவோடும், பிரகாசமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
ஃபேஸ் பேக் #5
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 1/2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் பால், 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்கை முழுமையாக வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

