Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
வெயிலால் உங்க முகம் கருப்பாயிடுச்சா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை நைட் டைம்-ல போடுங்க...
Summer Skin Care Tips In Tamil: கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெளியே சென்றாலே வெயில் சருமத்தை சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. சிறிது நேரம் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தாலே, சரும நிறம் கருமையாகிவிடுகிறது. அந்த அளவில் வெயிலின் தாக்கம் தீவிரமாக உள்ளது. மற்ற காலங்களை விட கோடைக்காலத்தில் சருமம் வேகமாக கருத்துவிடும்.
இந்நிலையில் சருமத்திற்கு தவறாமல் பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கருமையான சருமத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது சிரமமாகிவிடும். நீங்கள் உங்கள் முகம் வெயிலால் கருமையாகிவிட்டதை உணர்ந்தால், ஒருசில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போட்டு வந்தால் போதும். முகம் கருப்பாவதைத் தடுக்கலாம். இப்போது வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.

1. தக்காளி ஃபேஸ் பேக்
* முதலில் ஒரு துணியை எடுத்து, அதை வெதுவெதுப்பான நீரில் நனைத்து பிழிந்து, அந்த துணியை முகத்தின் மேல் 5 நிமிடம் வைக்க வேண்டும்.
* பின் அரைத்த தக்காளி கூழை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி துடைக்க வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால், சருமம் கருமையாவது தடுக்கப்படும்.
2. கற்றாழை, மஞ்சள் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.
3. பால் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
* ஒரு சிறிய பௌலில் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்து, பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை இரவு தூங்கும் முன் போட வேண்டும். அதுவும் வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும்.
4. சர்க்கரை மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை கருமையாக உள்ள முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* மறக்காமல், இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்திய பின் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும்.
* சிறப்பான பலன் கிடைக்க, வாரத்திற்கு 2 முறை இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்த வேண்டும்.
5. தயிர் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* பிறகு சருமத்தை உலர்த்தி மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை ஒருநாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
