Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க..
உங்க முகம் மேடு பள்ளமா அசிங்கமா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க..
Skin Care Tips In Tamil: தற்போது நிறைய பேர் திறந்த சருமத்துளை பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். அதுவும் இந்த பிரச்சனையானது மூக்குப் பகுதி, கன்னங்கள் மற்றும் நெற்றியைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும். உங்கள் முகமும் இப்படி தான் சருமத்துளைகள் திறந்து மேடு பள்ளமாக தெரிகிறதா? இதனால் நீங்கள் சற்று வயதான தோற்றத்துடன் காணப்படுகிறீர்களா? அதோடு உங்கள் முகம் எந்நேரமும் எண்ணெய் வழிந்தவாறு உள்ளதா?

இப்படியான நேரத்தில் சருமத்துளைகளை சுருங்கச் செய்யும் ஃபேஸ் பேக்குகளை போட்டு, சருமத்துளைகள் சுருங்க செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழலால், சருமத்துளைகளில் அழுக்குகள் சேர்ந்து, சருமத்துளைகள் இன்னும் பெரிதாகிவிடும். இப்போது திறந்த சருமத்துளைகள் சுருங்க உதவும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
1. முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. தக்காளி மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த தக்காளியை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதை முகத்தில் தடவி 10-12 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* முக்கியமாக இந்த ஃபேஸ் பேக் பயன்படுத்திய பின், தவறாமல் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
3. கற்றாழை மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. கடலை மாவு, மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 2 ஸ்பூன் தயிரை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. க்ரீன் டீ ஐஸ் கட்டிகள்
* இதற்கு க்ரீன் டீயை தயாரித்து குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதை ஐஸ் ட்ரேயில் ஊற்றி, ஃப்ரீசரில் வைத்து ஐஸ் கட்டியாக்க வேண்டும்.
* பிறகு அந்த ஐஸ் கட்டியைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்ய வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வரும் போது, சருமத்துளைகள் சுருங்குவதைக் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications