சிக்கன் மலாய் கபாப் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...

Posted By:

Chicken Malai Kebab Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் வாங்கி சமைப்பீர்களா? அந்த சிக்கனை எப்போதும் ஒரே மாதிரி 65 தான் பெரும்பாலும் செய்து சாப்பிடுவீர்களா? இதனால் உங்ளுக்கு சிக்கன் சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை சிக்கன் மலாய் கபாப் செய்து சாப்பிடுங்கள். இந்த கபாப் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

Chicken Malai Kebab How To Make This Chicken Starter

முக்கியமாக இதை எவ்வளவு நேரம் ஊற வைக்கிறோமோ, அந்த அளவில் இதன் சுவை பிரமாதமாக இருக்கும். குறிப்பாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். பெரும்பாலும் இப்படியான சிக்கன் ரெசிபியை ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட்டுகளில் தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் வீட்டிலேயே எளிய பொருட்களைக் கொண்டு இந்த ரெசிபியை செய்யலாம்.

உங்களுக்கு சிக்கன் மலாய் சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் மலாய் கபாப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருன்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* வெள்ளை/கருப்பு மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கெட்டி தயிர் - 1/2 கப்
* பிரஷ் க்ரீம் - 1/4 கப்
* எலுமிச்சை - 1
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - 1 டீஸ்பூன்
* வெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் எலும்பில்லாத சிக்கனை நீரில் நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகுத் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கெட்டி தயிர், பிரஷ் க்ரீம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் 1 எலுமிச்சையின் சாறு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கைகளால் நன்கு பிரட்டி, 2-6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு ஊறியதும், ஸ்க்யூவர் ஸ்டிக்ஸ் (skewer sticks) எடுத்து, சிக்கனை அந்த குச்சியில் சொருகி விட வேண்டும்.
* பிறகு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெயை தடவ வேண்டும்.
* அதன் பின் இந்த சிக்கனை அதில் வைத்து, மூடி வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, சிக்கன் மேல் வெண்ணெயை தடவி, திருப்பி போட்டு மீண்டும் மூடி வைத்து 5-7 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். இறுதியாக கறித்துண்டை எடுத்து நெருப்பில் நன்கு சுட்டு, அதை ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்து, அந்த கிண்ணத்தை சிக்கன் நடுவே வைத்து, கறித்துண்டின் மேல் நெய் சிறிது ஊற்றி, 2 நிமிடம் மூடி வைத்து, பின் பரிமாறினால் சுவையான சிக்கன் மலாய் கபாப் தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, July 12, 2026, 14:01 [IST]
Desktop Bottom Promotion