For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரும்புச்சத்து குறைபாடு குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

உலகெங்கிலும், குறிப்பாக இந்தியாவில் பெரும்பாலானோர் பாதிக்கப்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளில் ஒன்று தான் இரும்புச்சத்து குறைபாடு. உடலுக்குத் தேவையான முக்கியமான கனிமச்சத்துக்களில் ஒன்று இரும்புச்சத்து.

|

உடலின் மிகவும் முக்கியமான கூறுகளில் நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஒன்றாகும். ஏனெனில், இவை நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான பல்வேறு உடல் செயல்பாடுகளை உறுதி செய்கின்றன. இவற்றில் சில ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நம் உடலால் ஓரளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் பெரும்பாலானவை நாம் உண்ணும் உணவின் மூலம் தான் பெறப்படுகின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் ஏதேனும் ஒன்றில் குறைபாடு ஏற்படும் போது, அது உடலின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தி, ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

Myths About Iron Deficiency

உலகெங்கிலும், குறிப்பாக இந்தியாவில் பெரும்பாலானோர் பாதிக்கப்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளில் ஒன்று தான் இரும்புச்சத்து குறைபாடு. உடலுக்குத் தேவையான முக்கியமான கனிமச்சத்துக்களில் ஒன்று தான் இரும்புச்சத்து. ஏனெனில் இது இதயத்தில் இருந்து உடலின் பிற பாகங்களுக்கு இரத்தத்தை கடத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

MOST READ: பிபி, சுகர் வரக்கூடாதா? அப்ப காலையில இந்த இலைய வாயில போட்டு மெல்லுங்க...

இருப்பினும், ஆராய்ச்சியின் படி, உலகளவில் இந்த இரும்புச்சத்து குறைபாடு சுமார் 2 பில்லியன் மக்களையும், உலக மக்கள் தொகையில் சுமார் 40 சதவீத மக்களையும் பாதிக்கிறது. இந்தியாவில் மட்டும், இரும்புச்சத்து குறைபாடு 3 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் மத்தியில் பரவலாக உள்ளது.

MOST READ: நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் உணவுகள் எதுலாம்-ன்னு தெரிஞ்சுக்கணுமா? இத படிங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரும்புச்சத்து குறைபாடு குறித்த சில கட்டுக்கதைகள்:

இரும்புச்சத்து குறைபாடு குறித்த சில கட்டுக்கதைகள்:

மக்கள் மத்தியில் இரும்புச்சத்து குறைபாடு குறித்து பல்வேறு தவறான கருத்துக்கள் இருப்பதால், பலரால் இந்த குறைபாட்டை சரியாக கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள தாமதமாகிறது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை இரும்புச்சத்து குறைபாடு தீவிரமாவதைத் தடுக்க, ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய இரும்புச்சத்து குறைபாடு குறித்த கட்டுக்கதைகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து தெளிவாகிக் கொள்ளுங்கள்.

கட்டுக்கதை #1

கட்டுக்கதை #1

இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை இரண்டுமே ஒன்று தான்.

பெரும்பாலானோர் இரும்புச்சத்துக் குறைபாடு குறித்து இன்று வரை தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு முதன்மையான விஷயம் தான், இரத்த சோகையும், இரும்புச்சத்தும் ஒன்று என்பது. ஆனால் இரத்த சோகை என்னும் நிலை ஒருவருக்கு பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். அதில் ஒன்று தான் இரும்புச்சத்து குறைபாடு. எப்போது இரும்புச்சத்து ஒருவரது உடலில் குறைவான அளவில் இருக்கிறதோ, அப்போது உண்டாகும் ஒரு நிலை தான் இரத்த சோகை. எனவே இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையை உண்டாக்கும் ஒரு காரணிகளுள் ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கட்டுக்கதை #2

கட்டுக்கதை #2

சைவ உணவாளர்கள் தான் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள்.

அசைவ உணவு இரும்புச்சத்து நிறைந்த மூலமாக இருந்தாலும், அசைவம் அல்லது விலங்குகளை அடிப்படையாக கொண்ட உணவை உண்ணாத எவரும் நிச்சயம் வாழ்நாளில் ஒருமுறையாவது இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவர் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. தாவர அடிப்படையிலான உணவுகளிலும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. ஒருவர் நல்ல ஆரோக்கியமான, சீரான உணவுகளை உட்கொண்டு, தேவைப்பட்டால் ஊட்டச்சத்து நிபுணர் அல்லது மருத்துவருடன் கலந்தாலோசித்து சரியான உணவுகளை உட்கொண்டு வந்தால், நிச்சயம் விரைவில் இரும்புச்சத்து குறைபாட்டில் இருந்து தப்பிக்கலாம்.

கட்டுக்கதை #3

கட்டுக்கதை #3

இரும்புச்சத்து குறைபாடுள்ள இரத்த சோகை உள்ள பெண்கள் தாய்ப்பால் கொடுக்க முடியாது.

இரும்புச்சத்துக் குறைபாடுள்ள இரத்த சோகை இருக்கும் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் தங்கள் உணவில் வழக்கத்தை விட அதிக அக்கறை எடுத்து சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு வந்தால், தாய்ப்பால் கொடுக்கலாம். இரும்புச்சத்து நிறைந்த டயட்டைப் பின்பற்ற உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகுங்கள்.

கட்டுக்கதை #4

கட்டுக்கதை #4

இரும்புச்சத்து குறைபாடுள்ள இரத்த சோகை உள்ளவர்கள் கடுமையான உடற்பயிற்சி செய்யக்கூடாது.

இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் தீவிர உடற்பயிற்சி செய்யும் போது ஆரம்ப காலத்தில் சிறிது சிக்கலை சந்திக்க நேரிடும். ஏனெனில் அவர்களின் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பதால், இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் ஆரோக்கியமாக இருக்க சில வகையான உடற்பயிற்சிகளை அன்றாட வழக்கத்தில் சேர்ப்பது முக்கியம். எனவே மருத்துவரை அணுகி, உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து கேட்டறிந்துக் கொண்டு, படிப்படியாக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

கட்டுக்கதை #5

கட்டுக்கதை #5

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு போதுமான இரும்புச்சத்து இருந்தால், குழந்தைக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாது.

ஆய்வின் படி, கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்தின் தேவை முதல் மூன்று மாதங்களில் ஒரு நாளில் 0.8 மிகி-லிருந்து படிப்படியாக அதிகரித்து மூன்றாவது மூன்று மாத காலத்தில் 7.5 மிகி தேவையாகிறது. முழு கர்ப்ப காலத்தில், கர்ப்பிணிக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 4.4 மிகி இரும்புசத்து தேவைப்படுகிறது. கர்ப்ப காலத்தில், உறிஞ்சப்பட்ட இரும்புச்சத்து முக்கியமாக பெண்ணின் எரித்ரோசைட் வெகுஜனத்தை விரிவுபடுத்துவதற்கும், கருவின் இரும்புத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் மற்றும் பிரசவத்தில் இரும்புச்சத்து இழப்புகளுக்கு (அதாவது இரத்த இழப்புகளை) ஈடுசெய்யவும் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே தான் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளை மருத்துவர்கள் கொடுக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Myths About Iron Deficiency in tamil

Iron is one of the most important minerals required by the body, as it plays a very vital role in the transmission of blood from the heart to all other body parts and organs.
Desktop Bottom Promotion