For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் சந்திக்கும் செரிமான பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்லணுமா? அப்ப இத டெய்லி ஒரு டம்ளர் குடிங்க...

சோம்பு விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. இந்த விதைகளை உணவில் சேர்ப்பதால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும், கண் பார்வை மேம்படும், எடை இழப்பை ஊக்குவிக்கும் மற்றும் பல நன்மைகள் கிட்டும்.

|

நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் உள்ள ஒரு பொருள் தான் சோம்பு. இந்த சிறிய விதைகள் பலவாறு பயன்படுத்தப்படுகிறது. அதில் பெரும்பாலும் வாய் துர்நாற்றத்தைப் போக்க உணவு உண்ட பின் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சோம்பு விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. இந்த விதைகளை உணவில் சேர்ப்பதால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும், கண் பார்வை மேம்படும், எடை இழப்பை ஊக்குவிக்கும் மற்றும் பல நன்மைகள் கிடைக்கும்.

How Fennel Tea Can Help Eliminate Digestive Issues; Know Method To Prepare It In Tamil

இத்தகைய சோம்பு விதைகளைக் கொண்டு டீ தயாரித்து குடிக்கலாம். இந்த பானம் செரிமான பிரச்சனைகளை எதிர்த்துப் போராட பெரிதும் உதவியாக இருக்கும். தற்போது பலரும் மோசமான செரிமானத்தால் அன்றாடம் பல்வேறு செரிமான பிரச்சனைகளால் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். செரிமான பிரச்சனைக்கான ஒரு எளிய வீட்டு வைத்தியம் என்றால் சோம்பு டீயைக் கூறலாம். முக்கியமாக இந்த டீ உடனடி நிவாரணத்தை அளிக்கும். இப்போது சோம்பு டீ எப்படி செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது என்பதை காண்போம்.

MOST READ: பாத எரிச்சல் அதிகமா இருக்கா? அப்ப உங்க உடம்புல இது அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. கவனமா இருங்க..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமானத்தில் சோம்பு டீயின் நன்மைகள்

செரிமானத்தில் சோம்பு டீயின் நன்மைகள்

சோம்பு டீ செரிமானத்தை அதிகரிக்கும் மற்றும் பல செரிமான பிரச்சனைகளில் இருந்தும் விடுபட உதவும். இந்த டீ தசைகளைத் தளர்த்தி, பித்த நீரின் ஓட்டத்தைத் தூண்டுவதன் மூலம், செரிமானத்தை ஊக்குவிக்கிறது. சோம்பு விதைகள் ஒரு சக்தி வாய்ந்த மூலிகையாகும். வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புசத்தால் அவஸ்தைப்படுபவர்கள், சோம்பு டீயைக் குடிப்பது உடனடி நிவாரணத்தை அளிக்கும். மேலும் இது செரிமான மண்டலத்தை நல்ல அமைப்பில் வைத்துக் கொள்ளவும் உதவும்.

மொத்தத்தில் சோம்பு விதைகளில் பயனுள்ள தாவர கூறுகள் நிறைந்திருப்பதால், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கக்கூடியது. இப்போது சோம்பு டீயைக் குடிப்பதால் பெறும் பிற நன்மைகளைக் காண்போம்.

எடை இழப்பு

எடை இழப்பு

சோம்பு டீ செரிமானத்தை மேம்படுத்துவதுடன், வயிறு நிறைந்த திருப்தி உணர்வையும் அளிக்கும் என்பதால் கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டத்தைக் குறைத்து, எடை இழப்பிற்கு உதவி புரியும். ஆகவே நீங்கள் எடையைக் குறைக்க நினைத்தால், சோம்பு டீயை தினமும் ஒரு டம்ளர் குடியுங்கள்.

சுவாச பிரச்சனைகள்

சுவாச பிரச்சனைகள்

சோம்பு டீ சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. ஆய்வுகளில் சோம்பு விதைகள் ஆஸ்துமாவின் அறிகுறிகளைக் குறைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது. எனவே உங்களுக்கு சுவாச பிரச்சனைகள் ஏதேனும் இருப்பினும், தினந்தோறும் சோம்பு டீயைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

உட்காயங்கள்

உட்காயங்கள்

சோம்பு விதைகளில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இது உடலினுள் ஏற்படும் உட்காயங்கள்/அழற்சி/வீக்கத்தைக் குறைக்க உதவி புரியும். மூட்டு சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள் சோம்பு டீயைக் குடிப்பது நல்லது.

மாதவிடாய் அசௌகரியங்கள்

மாதவிடாய் அசௌகரியங்கள்

பொதுவாக பெண்கள் மாதவிடாய் காலங்களில் சொல்ல முடியாத அளவில் பல அசௌகரியமான பிரச்சனைகளை சந்திப்பார்கள். சோம்பு டீயை சூடாக குடித்து வந்தால், மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் அசௌகரியங்கள் குறையும்.

இரத்த சர்க்கரை சீராகும்

இரத்த சர்க்கரை சீராகும்

சர்க்கரை நோயாளிகள் சோம்பு டீ குடிப்பது நல்லது. மேலும் சர்க்கரை நோய் வராமல் இருக்க நினைத்தால், இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள சோம்பு டீ குடியுங்கள்.

சோம்பு டீ தயாரிப்பது எப்படி?

சோம்பு டீ தயாரிப்பது எப்படி?

* ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து, அதில் 2 கப் நீர் ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் சோம்பு விதைகளைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் சிறிது புதினா இலைகளை சேர்த்து, 2-3 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

* பிறகு அதை வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்தால், சோம்பு டீ தயார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Fennel Tea Can Help Eliminate Digestive Issues; Know Method To Prepare

Here's how fennel tea can help eliminate digestive issues and method to prepare this tea in tamil. Read on...
Desktop Bottom Promotion