For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க கோதுமையே சாப்பிடக்கூடாது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்!

இங்கு ஒருவருக்கு க்ளுட்டன் சகிப்புத்தன்மை இருப்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

தற்போது பலரும் டயட்டில் இருக்கிறேன் என்று அரிசி உணவைத் தவிர்த்து கோதுமை உணவிற்கு மாறியுள்ளனர். ஆனால் கோதுமை நிறைந்த உணவுகள் அனைத்துமே அனைவருக்கும் பொருந்தும் என்று கூற முடியாது. ஏனெனில் கோதுமையில் க்ளுட்டன் நிறைந்துள்ளது. சிலருக்கு க்ளுட்டன் நிறைந்த உணவுகள் சேராது.

இன்று நிறைய பேருக்கு க்ளுட்டன் நிறைந்த உணவுகள் அழற்சியாக உள்ளது. க்ளுட்டன் நிறைந்த உணவுகளை உட்கொண்டாலே ஒருசில பிரச்சனைகளால் அவஸ்தைப்படுவார்கள். க்ளுட்டன் சகிப்புத்தன்மை ஒருவருக்கு இருந்தால், அவர்கள் க்ளுட்டன் உணவுகளை உட்கொண்டதுமே, அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

Warning Signs You’re Gluten Intolerant

சரி, ஒருவருக்கு க்ளுட்டன் உணவுகள் அழற்சியாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்னவென்று தெரியாதா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு க்ளுட்டன் சகிப்புத்தன்மை இருந்தால் தென்படும் அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, க்ளுட்டன் உணவுகளைத் தவிர்த்து, உஷாராகிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமான பிரச்சனைகள்

செரிமான பிரச்சனைகள்

க்ளுட்டன் சகிப்புத்தன்மை இருந்தால் செரிமான பிரச்சனைகளான வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்றுபோக்கு போன்றவற்றை க்ளுட்டன் உணவுகளை உட்கொண்ட பின் சந்திக்க நேரிடும். குழந்தைகளுக்கு என்றால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். எனவே உங்களுக்கு இரைப்பைக் குடல் அழற்சி நோய் இருப்பது போல் இருந்தால், க்ளுட்டன் நிறைந்த உணவுகள் உண்பதை உடனே நிறுத்துங்கள்.

மனநிலை பிரச்சனைகள்

மனநிலை பிரச்சனைகள்

ஒருவருக்கு க்ளுட்டன் சகிப்புத்தன்மை பிரச்சனை இருந்தால், அவர்கள் அடிக்கடி மன இறுக்கம், மன பதற்றம், சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று கோபமடைவது போன்ற மனநிலை பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும். இந்நிலையில் இவர்கள் க்ளுட்டன் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

மூட்டு பிரச்சனைகள்

மூட்டு பிரச்சனைகள்

மூட்டுக்களில் அடிக்கடி வலியை சந்திக்கிறீர்களா? இதற்கு க்ளுட்டன் சகிப்புத்தன்மை காரணமாக இருக்கலாம் தெரியுமா? க்ளுட்டன் சிலரது மூட்டு இணைப்புக்களில் அழற்சியை உண்டாக்கி, மூட்டுக்களில் கடுமையான வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். எனவே உங்களுக்கு திடீரென்று மூட்டுக்களில் வலி அல்லது வீக்கம் ஏற்பட்டிருப்பின், அதற்கு உணவுகளில் உள்ள க்ளுட்டன் கூட காரணமாக இருக்கலாம்.

கெராடோசிஸ் பிலாரிஸ்

கெராடோசிஸ் பிலாரிஸ்

க்ளுட்டன் சகிப்புத்தன்மை இருந்தால், சருமத்தில் சிலருக்கு படத்தில் காட்டப்பட்டது போன்று புள்ளி புள்ளிகளாக இருக்கும். ஆனால் இந்த அலர்ஜி போன்ற புள்ளிகள் எவ்வித அரிப்பையும், எரிச்சலையும், வலியையும் ஏற்படுத்தாது. பொதுவாக இது கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ போன்றவற்றின் உட்கிரகிப்பு கோளாறு காரணமாக ஏற்படும். எப்போது ஒருவரது உடலில் க்ளுட்டன் தாக்கம் அதிகமாக இருக்கிறதோ, அப்போது இந்த சத்துக்கள் உடலில் போதுமான அளவு கிடைக்காமல் போகும்.

சோர்வு

சோர்வு

ஒருவர் அளவுக்கு அதிகமாக சோர்வை உணர்ந்தால், அதுவும் க்ளுட்டன் நிறைந்த உணவுகளை உட்கொண்ட பின் மிகுந்த சோர்வை உணர்ந்தால், அவர்களுக்கு க்ளுட்டன் சகிப்புத்தன்மை உள்ளது என்று அர்த்தம். இத்தகையவர்கள் தங்களது டயட்டில் கோதுமை மற்றும் இதர க்ளுட்டன் நிறைந்த தானியங்களைத் தவிர்த்தால், அவர்களது உடலில் ஆற்றல் பெருகி இருப்பதை உணரச் செய்யும்.

நாட்பட்ட களைப்பு

நாட்பட்ட களைப்பு

ஒருவருக்கு க்ளுட்டன் சகிப்புத்தன்மை பிரச்சனை இருந்தால், அவர்கள் நாட்பட்ட களைப்பினால் மிகுதியாக அவஸ்தைப்படுவார்கள். அதுவும் களைப்புடன், உடல் மற்றும் தசை வலியாலும் கஷ்டப்படுவார்கள். முக்கியமாக க்ளுட்டன் உணவுகளை உட்கொண்ட பின் இம்மாதிரியான களைப்பை உணர்ந்தால், உங்களுக்கு க்ளுட்டன் சகிப்புத்தன்மை உள்ளது என்று அர்த்தம்.

ஒற்றைத் தலைவலி

ஒற்றைத் தலைவலி

2001 இல் வெளிவந்த ஆய்வில், க்ளுட்டன் சகிப்புத்தன்மை இருந்தால், அவர்களுக்கு ஒற்றைத் தலைவலி வரும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. MRI ஸ்கேனில் க்ளுட்டன் சகிப்புத்தன்மை உள்ளவர்களை பரிசோதித்ததில், அவர்களது நரம்பு மண்டலத்தில் அழற்சி ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

ஆட்டோ இம்யூன் நோய்கள்

ஆட்டோ இம்யூன் நோய்கள்

ஏற்கனவே க்ளுட்டன் சகிப்புத்தன்மை உள்ள ஒருவர் பல நாட்களாக க்ளுட்டன் உணவுகளை உட்கொண்டு வந்தால், அது உடலினுள் அழற்சியை அதிகரித்து, ஆட்டோ இம்யூன் நோய்களின் தாக்கத்தை அதிகரிக்கும். அதில் லூபஸ், சொரியாசிஸ், ருமடாய்டு ஆர்த்ரிடிஸ், இரைப்பை அழற்சி, மல்டிபிள் ஸ்கிளிரோசிஸ் போன்ற நோய்கள் குறிப்பிடத்தக்கவை.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்

ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்

க்ளுட்டன் சகிப்புத்தன்மை இருந்தால், அந்த பெண்கள் மலட்டுத்தன்மை, பிசிஓஎஸ் மற்றும் முறையற்ற மாதவிடாய் சுழற்சி போன்றவற்றால் கஷ்டப்படுவார்கள். க்ளுட்டன் மூலம் அழற்சி ஏற்பட்டால், அது அட்ரீனல் சுரப்பியில் அழுத்தத்தைக் கொடுத்து, ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும்.

நரம்பியல் அறிகுறிகள்

நரம்பியல் அறிகுறிகள்

தலைச் சுற்றல், அடிக்கடி நிலைத்தடுமாறுதல், வெர்டிகோ, அடிக்கடி கை, கால்கள் மரத்துப் போதல் போன்றவை எல்லாம் நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட அழற்சியினால் ஏற்படுவதாகும். அதுவும் க்ளுட்டன் சகிப்புத்தன்மை ஒருவருக்கு இருந்தால், அவர்களுக்கு இம்மாதிரியான நரம்பியல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

உங்களுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தென்படுகிறதா? அப்படியானால் க்ளுட்டன் நிறைந்த உணவுகளை உங்களது டயட்டில் இருந்து விலக்கிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Warning Signs You’re Gluten Intolerant

Here are some warning signs of gluten intolerant. Read on to know more about it.
Story first published: Thursday, April 26, 2018, 21:36 [IST]
Desktop Bottom Promotion