For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலில் மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் குறைவாக இருப்பதைக் காட்டும் அறிகுறிகள்!

இங்கு உடலில் மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் குறைவாக இருப்பதைக் காட்டும் அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

நம் உடலில் உள்ள செல்கள் மற்றும் உறுப்புக்களின் சாதாரண செயல்பாட்டிற்கு அத்தியாவசியமானது தான் எலக்ட்ரோலைட்டுக்கள். இந்த எலக்ட்ரோலைட்டுக்கள் உடலில் சமநிலையில் இருக்க வேண்டியது அவசியம். உடலில் உள்ள பொதுவான எலக்ட்ரோலைட்டுக்களாவன பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், சோடியம், குளோரைடு போன்றவைகளாகும். இந்த எலக்ட்ரோலைட்டுக்கள் நம் இரத்தம், உடலில் உள்ள திரவங்கள் மற்றும் சிறுநீரில் இருக்கும்.

இந்த எலக்ட்ரோலைட்டுக்கள் வாந்தி, வயிற்றுப் போக்கு, வியர்வை, சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் குறிப்பிட்ட மருந்துகள் உடலில் செயல்முறைப்படுத்தும் போது உடலில் இருந்து இழக்கப்படும். அதோடு மதுப்பழக்கம், கல்லீரல் அழற்சி, இதய செயலிழப்பு, சிறுநீரக நோய்கள், சர்க்கரை நோய், உணவுமுறை கோளாறுகள், தீவிரமான காயங்கள் மற்றும் சில வகையான புற்றுநோய் போன்றவற்றாலும் எலக்ட்ரோலைட்டுக்கள் உடலில் குறையும்.

பெரும்பாலான எலக்ட்ரோலைட் சமநிலையின்மையானது உடல் வறட்சியால் ஏற்படும். அதே சமயம் அளவுக்கு அதிகமாக நீர்ச்சத்து இருந்தாலும் இந்நிலை ஏற்படும். இக்கட்டுரையில் உடலில் எலக்ட்ரோலைட்டுக்களான பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் போன்றவை குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் மற்றும் அவற்றை எப்படி சரிசெய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலக்ட்ரோலைட்டுக்களின் சமநிலையின்மையால் வெளிப்படும் அறிகுறிகள்:

எலக்ட்ரோலைட்டுக்களின் சமநிலையின்மையால் வெளிப்படும் அறிகுறிகள்:

* குமட்டல்

* களைப்பு

* நீர்த் தேக்கம்

* குழப்பமான மனநிலை

* தீவிரமான தலை பலவீனம்

* சீரற்ற இதயத் துடிப்பு

* வலிப்புத்தாக்கம்

* நெஞ்சு வலி

உடலில் இருக்க வேண்டிய எலக்ட்ரோலைட்டுக்களின் சரியான அளவு:

உடலில் இருக்க வேண்டிய எலக்ட்ரோலைட்டுக்களின் சரியான அளவு:

* கால்சியம்: 5-5.5 mEq/L

* குளோரைடு: 97-107 mEq/L

* பொட்டாசியம்: 5-5.3 mEq/L

* மக்னீசியம்: 1.5/2.5 mEq/L

* சோடியம்: 136/145 mEq/L

உடலில் எலக்ட்ரோலைட்டுக்களை சமநிலையில் பராமரிப்பது எப்படி?

உடலில் எலக்ட்ரோலைட்டுக்களை சமநிலையில் பராமரிப்பது எப்படி?

டயட்

அனைத்து வகையான சத்துக்களையும் பெறுவதற்கான சிறப்பான வழி என்றால் அது ஜங்க் உணவுகளைத் தவிர்ப்பதாகும். நல்ல சரிவிகித டயட்டில் புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புக்கள் மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் போன்றவை உடலுக்கு கிடைக்கும். இந்த அனைத்து சத்துக்களும் உடலை சமநிலையில் பராமரிக்க தேவையானதாகும். எனவே பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை அதிகம் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

உணவில் உப்பை கவனிக்கவும்

உணவில் உப்பை கவனிக்கவும்

பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட உணவுகளில் நாம் நினைத்திராத அளவில் சோடியம் நிறைந்துள்ளது. மேலும் சோடா, சாஸ், டெசர்ட், சாலட் ட்ரெஸ்ஸிங் போன்றவற்றிலும் சோடியம் அதிகம் உள்ளது. நீங்களே உணவை சமைத்து சாப்பிடுவதாக இருந்தால், உங்கள் உணவுகளில் டேபிள் உப்பை பயன்படுத்துவதற்கு பதிலாக இமாலய உப்பை பயன்படுத்துங்கள். இதனால் முக்கியமான கனிமச்சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு கிடைக்கும்.

தண்ணீரைக் குடியுங்கள்

தண்ணீரைக் குடியுங்கள்

தண்ணீரில் எலக்ட்ரோலைட்டுக்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது உடலில் திரவத்தின் சமநிலை மற்றும் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்கை வகிக்றிது. மேலும் தண்ணீர் உடலில் இரத்தத்தின் அடர்த்தியைக் குறைத்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்க உதவியாக இருக்கும்.

மருந்துகளை கவனிக்கவும்

மருந்துகளை கவனிக்கவும்

உங்களுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால், உடலே மருத்துவரை அணுகி, உங்களது மருந்துகளை மாற்றுங்கள், மேற்கொள்ள வேண்டிய டயட்டைக் கேட்டுப் பின்பற்றுங்கள் அல்லது ஏதேனும் சப்ளிமெண்ட்டுக்களை எடுக்க சொன்னால் தவறாமல் எடுங்கள்.

உடற்பயிற்சிக்குப் பின்...

உடற்பயிற்சிக்குப் பின்...

கடுமையான உடற்பயிற்சிக்குப் பின் தவறாமல் இளநீர் அல்லது ஏதேனும் எலக்ட்ரோலைட்டுக்கள் நிறைந்த பானங்களைக் குடியுங்கள். இதனால் தசை பலவீனம் அல்லது சோர்வு மற்றும் உடற்பயிற்சிக்குப் பின் தசைகளில் ஏற்பட்ட காயங்கள் விரைவில் குணமாகச் செய்யும்.

எப்சம் உப்பு குளியல்

எப்சம் உப்பு குளியல்

அளவுக்கு அதிகமான மன அழுத்தம் உடலில் மக்னீசியத்தின் அளவைக் குறைக்கச் செய்யும். எனவே நீங்கள் அடிக்கடி தசைப் பிடிப்புக்கள், தூங்குவதில் பிரச்சனை, மன பதற்றம் போன்றவற்றால் கஷ்டப்பட்டால், எப்சம் உப்பு குளியலை மேற்கொள்ளுங்கள். எப்சம் உப்பில் மக்னீசியம் அதிகம் உள்ளது. பொதுவாக உடலானது மக்னீசியத்தை செரிமான மண்டலத்தின் மூலம் உறிஞ்சுவதை விட, சருமத்தின் வழியே எளிதில் உறிஞ்சும். எனவே எப்சம் உப்பு குளியலை மேற்கொண்டால், விரைவில் உடலில் மக்னீசியத்தின் அளவை அதிகரிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unknown Warning Signs Of Electrolyte Imbalance

Here are some warning signs of electrolyte imbalance. Read on to know more...
Story first published: Monday, April 23, 2018, 13:08 [IST]
Desktop Bottom Promotion