உங்களுக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக அனைத்து வகையான புற்றுநோய்க்குமான அறிகுறிகள் அன்றாடம் சந்திக்கும் உடல்நல கோளாறுகள் போன்று தான் இருக்கும். அதில் பெண்களைத் தாக்கும் இரண்டு வகையான புற்றுநோய் தான் மார்பகம் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய்கள். பலரும் சிறுநீர்ப்பை புற்றுநோய்கள் வயதான காலத்தில் தான் வரும் என்று நினைக்கின்றனர்.

Symptoms Of Bladder Cancer Everyone Should Know

ஆனால் இந்த வகை புற்றுநோய்கள் பெண்களையும் தாக்குவதோடு, முற்றிய நிலையில் தான் அறிகுறிகளைத் தீவிரமாக காட்டுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. எனவே உடலில் எந்த ஒரு பிரச்சனையையும் தினமும் சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி சோதித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

இப்போது இக்கட்டுரையில் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறுநீரில் இரத்தம்

சிறுநீரில் இரத்தம்

சிறுநீர் கழிக்கும் போது இரத்தம் கலந்தவாறு இருந்தால், அது சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். பெண்களுக்கு இந்த வகை புற்றுநோய் இருந்து, இந்த அறிகுறி தென்பட்டால், பல பெண்களும் மாதவிடாய் சுழற்சியாக இருக்கும் என்று நினைத்து விட்டுவிடுவார்கள். ஆனால் சிறுநீரில் இரத்தம் கலந்திருப்பதை நீங்கள் எப்போது பார்த்தாலும், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

சிறுநீர் பாதை தொற்றுகளுக்கான அறிகுறிகள்

சிறுநீர் பாதை தொற்றுகளுக்கான அறிகுறிகள்

சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் அல்லது வலியை உணர்ந்தாலோ அல்லது அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வைப் பெற்றாலோ, அவசரமாக சிறுநீர் வருவது போன்ற உணர்வைப் பெற்று சிறுநீர் வராமல் இருந்தாலோ, சிறுநுர்ப்பை புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளது.

அடிவயிற்றுப் பகுதியில் கடுமையா வலி

அடிவயிற்றுப் பகுதியில் கடுமையா வலி

இடுப்பு அல்லது அடிவயிற்றில் கடுமையான வலியை உணர்ந்தால், அது சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். சில நேரங்களில் இந்த வலி இடுப்பு பகுதிகளில் உள்ள எலும்புகளில் கூட ஏற்படும். இம்மாதிரியான வலி ஏற்பட்டால், சாதாரணமாக விட்டுவிடாதீர்கள்.

பசியின்மை

பசியின்மை

பசியின்மையும் புற்றுநோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். இதற்கு உடலினுள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி அதிகமாக உள்ளது என்று அர்த்தம். அதே சமயம் எடை குறைவு, மிகுதியான சோர்வு போன்றவற்றையும் உணரக்கூடும்.

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல் ஓர் அறிகுறியாக இல்லாவிட்டாலும், புகைப்பிடிக்கும் 50% பேருக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே உடனே புகைப்பிடிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Symptoms Of Bladder Cancer Everyone Should Know

Read this article to know about the symptoms of bladder cancer in men and women.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter