Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
Nombu Kanji Benefits: நோன்பு கஞ்சி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Ramadan Nombu Kanji Benefits In Tamil: இஸ்லாமியர்களின் மிகவும் முக்கியமான ஐந்து கடமைகளுள் ரமலான் நோன்பும் ஒன்றாகும். மிகவும் புனிதமான ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் பகல் முழுவதும் எச்சில் கூட விழுங்காமல் கடுமையான நோன்பு இருந்து, சூரிய அஸ்தமனத்திற்கு பின் நோன்பை முடிப்பார்கள்.
அதுவும் அப்படி நோன்பை முடிக்கும் போது ஒரு கப் நோன்பு கஞ்சி குடிப்பார்கள். இப்படி நீண்ட நேரம் நோன்பிருந்த பின் நோன்பு கஞ்சி குடிக்கும் போது கிடைக்கும் சுகமே தனி தான். நோன்பு கஞ்சி மிகவும் சுவையானது மட்டுமின்றி, உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது என்பது தெரியுமா?

இந்த நோன்பு கஞ்சியின் நன்மைகள் குறித்து 12 ஆண்டுகளுக்கும் மேலான மருத்துவ அனுபவம் கொண்ட, பெண்கள் நலம், எலும்பியல் சார்ந்த பாதிப்புகள் மற்றும் விளையாட்டுத் துறை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் சுமையா நாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அதுவும் நோன்பு கஞ்சியின் நன்மைகள் தெரிந்தால், இனிமேல் அதை தவறாமல் பள்ளிவாசலில் வாங்கியோ அல்லது வீட்டிலேயே செய்தோ குடிப்பீர்கள். இப்போது நோன்பு கஞ்சியின் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.
1. உடல் சுத்தமாகும்
"பொதுவாக நோன்பு இருக்கும் போது உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, உடல் முழுவதும் சுத்தமாகும். மேலும் நோன்பு முடிந்து வயிறு முட்ட உணவை உண்ணும் போது, அதன் விளைவாக செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே இதை தவிர்க்க, இஸ்லாமிய மக்கள் எளிதில் செரிமானமாகக்கூடியவாறான மற்றும் உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கக்கூடியவாறான நோன்பு கஞ்சியை குடிக்கிறார்கள்" என்று டாக்டர் கூறினார்.
2. உடல் கொழுப்பு குறையும்
"நோன்பு இருக்கும் போது, நமது உடலில் கீட்டோசிஸ் என்னும் செயல்முறை நடக்கத் தொடங்கும். இதனால் உடலில் உள்ள குளுக்கோஸ், முதலில் ஆற்றலாக மாற்றப்படும். அதன் பின் கல்லீரல், சிறுநீரகம், கணையம் போன்ற உள்ளுறுப்புக்களின் மேல் தேங்கியுள்ள கொழுப்புக்களானது கீட்டோசிஸ் செயல்முறை தொடங்குவதால், உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் குறையத் தொடங்கும். இதன் மூலம் உடல் ஃபிட்டாக இருக்கும்" என்று டாக்டர் கூறினார்.
3. இதய ஆரோக்கியம் மேம்படும்
"நோன்பு மேற்கொள்வதால் இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகள் குறையும். மேலும் மாரடைப்பு, பக்கவாதத்தின் அபாயம் மற்றும் மன அழுத்தத்தின் அளவும் நன்றாகவே குறையும்" என்று டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! இதுவரை நீங்கள் நோன்பு கஞ்சியை முயற்சித்தது இல்லை என்றால், உடனே தயாரித்து குடியுங்கள். அதுவும் வெறுமனே நோன்பு கஞ்சியை குடிப்பதற்கு பதிலாக, ஒருநாள் நோன்பு இருந்து பின் கஞ்சியை குடியுங்கள். இதனால் உடலும் ஃபிட்டாக இருக்கும், நோன்பு கஞ்சியின் சுவையும் கூடுதல் ருசியாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications