உங்கள் கண்கள் சோர்வாக இருக்கிறது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஒருவருக்கு கண் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். உடலின் மற்ற உறுப்புகளுக்கு கொடுக்கப்படும் பராமரிப்புக்களைப் போலவே, கண்களுக்கும் போதிய பராமரிப்புக்களையும் ஓய்வையும் வழங்க வேண்டியது அவசியம்.

அதிலும் நீங்கள் தினமும் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் உங்கள் கண்கள் மிகவும் வேகமாக சோர்வடைந்துவிடும் என்பது தெரியுமா? உங்கள் கண்கள் சோர்வடைந்திருந்தால் ஒருசில அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகளைத் தான் இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண் எரிச்சல் அல்லது கண்கள் சிவப்பாதல்

கண் எரிச்சல் அல்லது கண்கள் சிவப்பாதல்

உங்கள் கண்களில் எரிச்சல் அதிகமாக இருந்தாலோ அல்லது கண்கள் சிவந்து காணப்பட்டாலோ, கண்கள் வறட்சி அடைந்துள்ளது என்று அர்த்தம். இந்நேரத்தில் நீரை அதிகம் குடிப்பதோடு, கண்களுக்கு போதிய ஓய்வையும் வழங்க வேண்டியது மிகவும் அவசியம்.

பார்ப்பதில் சிரமம்

பார்ப்பதில் சிரமம்

கண்கள் சோர்வாக இருந்தால், பார்ப்பதில் சிரமத்தை உணரக்கூடும். அதாவது அனைத்து பொருட்களும் கண்களுக்கு மங்கலாக தெரிய ஆரம்பிக்கும்.

கண்களில் இருந்து நீர் வடிதல்

கண்களில் இருந்து நீர் வடிதல்

கண்களில் இருந்து நீர் வடிய ஆரம்பித்தாலும், கண்கள் சோர்வடைந்துள்ளது என்பதற்கான அறிகுறியாகும். இந்நேரத்தில் கண்களுக்கு ட்ராப்ஸ் பயன்படுத்துவதற்கு பதிலாக, மருத்துவரை அணுகி, சரியான காரணத்தை அறிந்து சிகிச்சை எடுங்கள்.

கண் கூச்சம்

கண் கூச்சம்

கண்கள் மிகவும் சோர்ந்திருந்தால், கண் இமைகளைத் திறப்பதே கடுமையாக இருக்கும் மற்றும் வெளிச்சத்தை பார்த்தாலே கண்கள் கூச ஆரம்பிக்கும். இம்மாதிரியான நேரத்தில் மருத்துவரை உடனே அணுக வேண்டியது அவசியம்.

கண் வலி

கண் வலி

கண்களில் அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்படும் போது, அதாவது கண்களுக்கு ஓய்வு கிடைக்கும் நேரமான தூக்கத்தை சரியாக மேற்கொள்ளாமல் இருந்தால், கண்கள் வலிக்க ஆரம்பிக்கும். அதுவும் கண்களில் வலி ஆரம்பித்து, அது அப்படியே கழுத்து, தோள்பட்டை அல்லது முதுகு பகுதியையும் பாதிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Signs That Your Eyes Are Tired

Here are some signs that your eyes are tired. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter