உங்களுக்கு நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் என்பது நுரையீரலில் மெதுவாக அழுத்தம் அதிகரிக்க ஆரம்பிக்கும். இப்பிரச்சனை இருந்தால், இதற்கான அறிகுறிகள் நமக்கு தெரிய சில மாதங்கள் அல்லது வருடங்கள் கூட ஆகலாம். மேலும் இந்த பிரச்சனைக்கான அறிகுறிகள் ஆரம்பத்திலேயே தெரியாது.

Common Symptoms Of Pulmonary Hypertension

ஆனால் இப்பிரச்சனை வளர வளர அறிகுறிகள் நமக்கு தெரிய ஆரம்பிக்கும். இக்கட்டுரையில் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்திற்கான சில முக்கிய அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூச்சு விடுவதில் சிரமம்

மூச்சு விடுவதில் சிரமம்

நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் இருந்தால், நுரையீரலில் உள்ள அழுத்தத்தால் மூச்சு விடுவதில் சிரமத்தை அனுபவிக்கக்கூடும். ஆரம்ப காலத்தில் உடற்பயிற்சி செய்தால் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட நேரிடும். பின் படிக்கட்டு ஏறினாலோ, வீட்டை சுத்தம் செய்தாலோ அல்லது ஓய்வு எடுக்கும் போதோ சுவாசிக்க முடியாமல் அவஸ்தைப்பட நேரிடும்.

சோர்வு

சோர்வு

நுரையீரலுக்கு போதுமான அளவு இரத்தம் கிடைக்காத போது, நுரையீரலால் சரியாக செயல்பட முடியாமல் போகும். இது அப்படியே மூளையின் செயல்பாட்டையும் பாதிக்கும். இதனால் ஆரம்பத்தில் அடிக்கடி எளிதில் சோர்வடையக்கூடும். ஒரு கட்டத்தில் அடிக்கடி மயக்கம் போட்டு விழக்கூடும்.

கணுக்கால் மற்றும் கால்களில் வீக்கம்

கணுக்கால் மற்றும் கால்களில் வீக்கம்

நுரையீரல் தமனி உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அது கால்கள், கணுக்கால் மற்றும் பாதங்களில் நீர்க்கட்டுக்களை உருவாக்கும். ஏனெனில் சிறுநீரகங்களால் உடலில் உள்ள டாக்ஸின்களை சரியாக வெளியேற்ற முடியாமல் போய், உடலில் நீர் தேங்க ஆரம்பிக்கும். இதை சரிசெய்ய தாமதப்படுத்தினால், அடிவயிற்றில் நீர்க்கட்டு உருவாகும்.

சயானோஸிஸ்/நீலம் பாய்தல்

சயானோஸிஸ்/நீலம் பாய்தல்

இந்த நிலையானது உடலில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இல்லாத போது ஏற்படும். இதனால் சருமம் மற்றும் உதட்டின் நிறம் நீல நிறமாகும். ஏனெனில் இந்த பிரச்சனையின் போது நுரையீரல் தமனி அதிக அழுத்தத்திற்குட்படுவதால், நீண்ட நேரம் இந்த அழுத்தம் நீடிக்கும் போது, சரும நிறம் நீலமாக மாறும்.

ஒழுங்கற்ற இதயத் துடிப்பு

ஒழுங்கற்ற இதயத் துடிப்பு

சில சமயங்களில், நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் நெஞ்சு வலியையும் உண்டாக்கும். இதயத்தில் அழுத்தம் அதிகரித்து, இரத்தம் நுரையீரலுக்கு அதிகமாக அழுத்தப்படும் போது, இந்த நெஞ்சு வலி ஏற்படுகிறது. அதோடு, ஒழுங்கற்ற இதயத் துடிப்பும் இருக்கும். எனவே எப்போதும் நெஞ்சு வலி வந்தால், சாதாரணமாக நினைத்து மட்டும் விடாமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Common Symptoms Of Pulmonary Hypertension

Here are some common symptoms of pulmonary hypertension. Read on to know more...
Story first published: Tuesday, May 23, 2017, 16:40 [IST]