For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிதீவிர இடைவெளி பயிற்சி (HIIT) குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

அதிதீவிர இடைவெளி பயிற்சி என்பதைத் தான் HIIT என்று கூறுகின்றனர். HIIT பயிற்சியில் இறங்குவதற்கு முன்னர் இது குறித்த சில விஷயங்கள் பற்றி அறிந்து கொள்வது நல்லது.

|

அதிதீவிர இடைவெளி பயிற்சி என்பதைத் தான் HIIT என்று கூறுகின்றனர். தற்போது பிட்னஸ் உலகில் மிகவும் பிரபலமான பயிற்சியாக HIIT விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளில் மிகவும் பிரபலமடைந்த இந்த பயிற்சி குறைந்த காலத்தில் அதிக பலனைத் தருகிறது என்பது இதன் புகழுக்கான முக்கிய காரணம்.

MOST READ: தைராய்டு பிரச்சனைக்கான சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

நீண்ட நேரம், மணிக்கணக்கில் ஜிம்மில் பயிற்சி மேற்கொள்ள விரும்பாதவர்கள், அதே அளவு பலனை இந்த வகை பயிற்சியின் மூலம் பெறுகின்றனர். HIIT பயிற்சியில் இறங்குவதற்கு முன்னர் இது குறித்த சில விஷயங்கள் பற்றி அறிந்து கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிதீவிர இடைவெளி பயிற்சி (HIIT) என்றால் என்ன?

அதிதீவிர இடைவெளி பயிற்சி (HIIT) என்றால் என்ன?

HIIT என்பது அதிதீவிர கார்டியோ பயிற்சி மற்றும் வலிமை பயிற்சிகளை ஒருங்கிணைந்தது. அதே சமயம் குறைவான கால அளவைக் கொண்டது. பொதுவாக, ஒரு HIIT பயிற்சி காலம் 20 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். உங்கள் அதிகபட்ச இதயத்துடிப்பில் 90% வரை இந்த பயிற்சியின் போது அதிகரிக்கலாம். நீண்ட நேரம் செலவழிக்காமல் அதிக நன்மைகளை பெற இந்த உடற்பயிற்சிகள் உங்களுக்கு உதவும்.

இந்த பயிற்சிக்கான அடிப்படை குறித்த ஞானம் வேண்டும்

இந்த பயிற்சிக்கான அடிப்படை குறித்த ஞானம் வேண்டும்

கார்டியோ மற்றும் வலிமை பயிற்சிக்கான ஒருங்கிணைந்த ஒரு பயிற்சி HIIT ஆகும். HIIT பயிற்சியை மேற்கொள்வதற்கு முன்னர் சில அடிப்படை உடற்பயிற்சிகளை ஒருவர் சிறப்பாக செய்ய வேண்டும். குறைந்த இடைவெளியில் செய்யக்கூடிய ஒரு அதிதீவிர பயிற்சி இதுவாகும். உங்கள் வடிவத்தை மாற்றக்கூடிய போதிய நேரம் இல்லாமல் இருப்பதால் தசை வலிக்கு வழிவகுக்கலாம். உங்கள் வடிவத்தை முன்னரே சரி செய்வது சிறந்த பலனைத் தரலாம். இதனால் காயம் ஏற்படும் அபாயம் குறையலாம்.

நீங்கள் கடினமாக பயிற்சி செய்ய வேண்டும்

நீங்கள் கடினமாக பயிற்சி செய்ய வேண்டும்

தொடக்கத்தில் இந்த வகை பயிற்சி ஒரு சிறு அச்சறுத்தலை உண்டாக்கக்கூடும். வேகமான பயிற்சி மற்றும் அதிக கலோரிகள் எரிக்கப்பட வேண்டும் என்பதற்காக உங்களை அதிகம் வருத்திக் கொள்ள நேரலாம். உங்கள் பயிற்சியாளர் கூறுவதை புரிந்து கொள்வதில் கடினம் ஏற்படலாம். அதற்காக நீங்கள் உணர்ச்சிவசப்பட வேண்டாம். ரிலாக்ஸ் செய்து கொண்டு தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். அடுத்த 3-4 வகுப்புகளில் உங்களால் இந்த பயிற்சியை எளிதாக செய்ய முடியும்.

மெதுவாக தொடங்குங்கள்

மெதுவாக தொடங்குங்கள்

எந்த ஒரு விஷயத்தையும் புதிதாக தொடங்கும் போது மெதுவாக நிதானமாக தொடங்குங்கள். உங்கள் புதிய வழக்கத்தை எதிர்கொள்ள உங்கள் உடலுக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படலாம். குறிப்பாக நீங்கள் மேற்கொள்வது அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அதிதீவிர உடற்பயிற்சி என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொதுவாக HIIT பயிற்சிகள் 30 நிமிடங்களுக்கு மேல் நீட்டிக்கப்படாது. இருந்தாலும் தொடக்கத்தில் 10 நிமிடத்தில் தொடங்கி, மெதுமெதுவாக நேரத்தை அதிகரிக்கலாம்.

உங்கள் உடல் மொழியை கவனியுங்கள்

உங்கள் உடல் மொழியை கவனியுங்கள்

HIIT பயிற்சி செய்வதால் குறைந்த காலத்தில் அதிக பலனை நீங்கள் பெற முடியும். ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது HIIT என்பது அதிதீவிர பயிற்சி அதாவது அதிக தாக்கத்தை உண்டாக்கும் ஒருவித பயிற்சி. மேலும் ஒரு இடைவெளி இல்லாமல் தினமும் இதனை பயிற்சி செய்வதால் உடலுக்கு பாதிப்பு ஏற்படலாம். ஆகவே தினமும் உடற்பயிற்சி செய்யாமல் அவ்வப்போது பயிற்சிக்கு இடையில் இடைவெளி கொடுத்து உங்கள் உடலை கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் மிகவும் சோர்வாக உணர்ந்தால் அந்த நாளில் சில எளிய பயிற்சிகளை மட்டும் மேற்கொள்ளலாம்.

உங்கள் உடலுக்கு ஆற்றலைக் கொடுங்கள்

உங்கள் உடலுக்கு ஆற்றலைக் கொடுங்கள்

உடற்பயிற்சி வகுப்பிற்கு முன் உங்கள் உடலை ஆற்றலுடன் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். HIIT பயிற்சி என்பது உடலுக்கு சவாலான ஒரு பயிற்சி மற்றும் இதற்கு மிக அதிக ஆற்றல் தேவை. எதுவும் உட்கொள்ளாமல் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யத் தொடங்குவதால் நீங்கள் எளிதில் சோர்வடையலாம். மேலும் முழு வகுப்பையும் உங்களால் முடிக்க இயலாமல் போகலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Things You Should Know About HIIT In Tamil

What is HIIT? Here are some things you should know about HIIT before trying it in tamil. Read on...
Desktop Bottom Promotion