Latest Updates
-
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க...
Mutton Liver Fry Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு உடம்பில் இரத்தம் குறைவாக உள்ளதா? அப்படியானால் அவர்களுக்கு மட்டன் ஈரலை வாங்கி குழம்பு செய்யாமல், வறுவல் சமைத்து கொடுங்கள். ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் ஈரலை விரும்பி சாப்பிடமாட்டார்களா?
அப்படியென்றால், அந்த ஈரலைக் கொண்டு வறுவல் செய்யுங்கள். இப்படி மசாலா அரைத்து ஈரலுடன் சேர்த்து ஊற வைத்து, பின் வறுவல் செய்யும் போது சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். குறிப்பாக பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு ஆட்டு ஈரல் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆட்டு ஈரல் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* சின்ன தக்காளி - 1 (நறுக்கியது)
ஊற வைப்பதற்கு..
* 1 ஆட்டு ஈரல்
* மஞ்சள் தூள் - சிறிது
* கறி மசாலா தூள் - 3/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* அரைத்த மசாலா
வறுவலுக்கு...
* நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
* சோம்பு - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், சின்ன வெங்காயம்,
இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் சிறிய அளவிலான தக்காளியை சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் ஆட்டு ஈரலை கழுவி சிறு துண்டுகளாக்கி,
அத்துடன் மஞ்சள் தூள், கறி மசாலா தூள், 1 டீஸ்பூன் எண்ணெய் மற்றும்
அரைத்து வத்துள்ள மசாலாவை சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் நல்லெண்ணெய்
ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள ஈரலை சேர்த்து நன்கு கிளறி, சிறிது நீரை
ஊற்றி பிரட்டி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் நன்கு
எண்ணெய் பிரிய வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் மிளகுத் தூளை சேர்த்து
நன்கு கிளறி, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கறிவேப்பிலை மற்றும் சிறிது கொத்தமல்லியைத் தூவி
கிளற இறக்கினால், சுவையான மட்டன் ஈரல் வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications











