Latest Updates
-
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைபவர்களாக இருப்பார்களாம் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க -
இந்த பிரச்சனை இருந்தா, பூண்டு அதிகமா சாப்பிடாதீங்க.. - எச்சரிக்கும் டாக்டர்! -
நாகர்கோயில் வாழைக்காய் துவட்டல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
September 2026 Career Horoscope: செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இந்தியாவில் பின்னோக்கி பாயும் ஒரேயொரு நதி எது தெரியுமா? இது பின்னோக்கி பாய காரணம் என்ன தெரியுமா? -
லன்ச்பாக்ஸ்-க்கு ஒருடைம் இப்படி கீரை சாதம் செஞ்சு குடுங்க.. ருசியாவும் இருக்கும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்..
வாரம் ஒருமுறை ஆட்டு ஈரல் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
Mutton Liver Benefits In Tamil: நீங்கள் அசைவ பிரியரா? மட்டன் அல்லது ஆட்டுக்கறியை விரும்பி சாப்பிடுவீங்களா? மட்டனை விரும்பி சாப்பிடும் பலரும் அதன் உறுப்பு இறைச்சிகளையும் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக ஆட்டு ஈரலை விரும்பி சாப்பிடுவார்கள்.
சொல்லப்போனால் ஆட்டிறைச்சியை விட, ஆட்டு ஈரல் ஏராளமான சத்துக்களைக் கொண்டுள்ளன. ஆட்டு ஈரலை அடிக்கடி வாங்கி சாப்பிட்டால், உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

ஆட்டு ஈரலைக் கொண்டு கிரேவி, ப்ரை என்று பலவாறு சமைத்து சாப்பிடலாம். எப்படி சமைத்து சாப்பிட்டாலும், அதன் சுவை அட்டகாசமாக இருக்கும். சரி, ஆட்டு ஈரலை சாப்பிடுகிறீர்களே, அந்த ஆட்டு ஈரல் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா? கீழே ஆட்டு ஈரலை சாப்பிடுவதால் எந்த மாதிரியான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்பன குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
1. ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டவை
ஆட்டு ஈரல் மிகவும் சத்தான உணவுகளில் ஒன்றாகும். ஆட்டு ஈரலில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, காப்பர், இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. ஒரு வேளை ஆட்டு ஈரலை சாப்பிட்டால், ஒரு நாளைக்கு வேண்டிய சத்து அனைத்துக்களையும் பெற முடியும். முக்கியமாக ஆட்டு ஈரலை அடிக்கடி உட்கொண்டு வந்தால், எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடுகளும் ஏற்படாது.
2. இரத்த சோகை
ஆட்டு ஈரலில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 அதிகமாக உள்ளன. எனவே ஏற்கனவே இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆட்டு ஈரலை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால், இரத்த சோகையில் இருந்து விடுபடலாம். வாரம் ஒருமுறை ஆட்டு ஈரலை சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்தம் நன்கு ஊறி, இரத்த சோகையில் அபாயம் குறையும்.
3. ஆரோக்கியமான எலும்புகள்
ஆட்டு ஈரலில் வைட்டமின் கே அதிகமாக உள்ளன. இது எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் வலிமைக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் வைட்டமின் கே தான் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவி புரிகின்றன. எனவே எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாது என்று நினைத்தால் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், ஆட்டு ஈரலை வாரம் ஒருமுறை சாப்பிடுங்கள்.
4. ஆரோக்கியமான சருமம்
ஆட்டு ஈரலில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளன. இது சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ள உதவுகிறது. பல்வேறு சரும பராமரிப்பு பொருட்களிலும் வைட்டமின் ஏ உள்ளன. ஏனெனில் அழகான சருமத்திற்கு இச்சத்து மிகவும் இன்றியமையாதது. எனவே நீங்கள் அழகாக காட்சியளிக்க விரும்பினால் ஆட்டு ஈரலை அடிக்கடி சாப்பிடுங்கள்.
5. நினைவாற்றல் மேம்படும்
ஆட்டு ஈரலில் வைட்டமின் பி, இரும்புச்சத்து மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் போன்றவை உள்ளன. இவை அனைத்தும் மூளையின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு இன்றியமையாத சத்துக்களாகும். எனவே மூளை சிறப்பாக செயல்படவும், நினைவாற்றல் மேம்படவும் ஆட்டு ஈரலை சாப்பிடுங்கள்.
6. ஆற்றல் அதிகரிக்கும்
நீங்கள் மிகுந்த சோர்வு மற்றும் உடல் பலவீனத்தை உணர்கிறீர்களா? உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்க வேண்டும் மற்றும் உடலில் ஆற்றல் எப்போதும் நிறைந்திருக்க வேண்டுமானால், ஆட்டு ஈரலை அடிக்கடி சாப்பிடுங்கள்.
7. கண்களுக்கு நல்லது
கண்களின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் ஏ மிகவும் இன்றியமையாத சத்தாகும். இந்த வைட்டமின் ஏ ஆட்டு ஈரலில் அதிகமாக உள்ளன. எனவே கண்கள் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாது மற்றும் கண் பார்வை சிறப்பாக இருக்க வேண்டுமானால், அடிக்கடி ஆட்டு ஈரலை சாப்பிடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications