வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்!

Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2026 மார்ச் 08 ஆம் தேதி முதல் 2026 மார்ச் 14 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Weekly Horoscope For 08 March 2026 To 14 March 2026 In Tamil

மேஷம்

இந்த வாரம் கடந்த வாரத்தை விட சற்று சிறப்பாக இருக்கும். திட்டமிட்ட பணிகளை சரியான நேரத்தில் முடிப்பதால் உங்கள் உற்சாகமும் தைரியமும் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளும் கடின உழைப்பும் பணியிடத்தில் அங்கீகரிக்கப்படும். வாரத்தின் நடுப்பகுதியில் உயர் அதிகாரிகளின் உதவியுடன் லாபம் ஈட்ட வாய்ப்புகள் இருக்கும். இந்த வாரம் உங்கள் விருப்பம் நிறைவேறக்கூடும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். காதல் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் சற்று குழப்பமான மனநிலையில் இருப்பார்கள். வேலை செய்பவராக இருந்தாலும் சரி, தொழிலதிபராக இருந்தாலும் சரி, எந்தவொரு முக்கியமான முடிவையும் எடுப்பதற்கு முன் வயதில் மூத்தவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படலாம். வேலை செய்பவர்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். வேலையில் உங்கள் எதிரிகள் தடைகளை உருவாக்கக்கூடும் என்பதால், அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். வேலை தேடிக் கொண்டிருந்தால், இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டிருக்கும். நிதி சிக்கல்கள் உங்களை கவலையடையச் செய்யும்.

மிதுனம்

இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் வரும் அனைத்து சவால்களையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். பிரச்சனைகளை பார்த்துக் கொண்டு இருப்பதற்குப் பதிலாக, அவற்றுக்கான தீர்வுகளைக் காண முயற்சிக்க வேண்டும். வியாபாரிகள் நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருங்கள். வாரத்தின் முதல் பாதியில், செலவுகள் வருமானத்தை விட அதிகமாக இருக்கும். சிறந்த காதல் உறவைப் பராமரிக்க, உங்கள் விருப்பங்களை உங்கள் காதல் துணையின் மீது திணிப்பதையோ அல்லது அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதையோ தவிர்க்க வேண்டும்.

கடகம்

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும், உங்கள் பேச்சு ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியில் வெற்றியை அடைய உதவும். வணிகம் மற்றும் வர்த்தகம் செழித்து, நிதி ஆதாயங்களைத் தரும். புதிய முயற்சிகள் தொடங்கப்படலாம், மேலும் உங்கள்மனைவி மூலம் கணிசமான நிதி உதவியைப் பெறலாம். இந்த வாரம் சுப நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டுவரும். தடைபட்ட திட்டங்கள் நிறைவடையும், புதிய வாகனங்கள் அல்லது சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் நிகழ்ந்து வந்த பழைய சச்சரவுகள் தீரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் முதல் பாதியில் சில தடைகளை சந்தித்தாலும், இறுதியில் எதிர்பார்த்த வெற்றியையும் லாபத்தையும் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சிறப்பு ஆதரவைப் பெறுவீர்கள், இது உங்கள் துணிச்சலையும் தைரியத்தையும் அதிகரிக்கும். வாரத்தின் நடுப்பகுதி தொழில் ரீதியாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வணிகத் திறன்கள் மேம்படும். தொழிலில் முதலீடு செய்ய திட்டமிடலாம். இருப்பினும், ஆபத்தான முதலீடுகளைத் தவிர்க்கவும். ஆரோக்கியம் மற்றும் உறவுகளின் அடிப்படையில் சாதகமாக இருக்கும்.

கன்னி

இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வேலை மற்றும் வணிகம் தொடர்பான விஷயங்களில் சூழல் சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு துணையாக இருப்பதால் வெற்றிகள் குவியும். பணியிடத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்தில் இடமாற்றம் பெற அல்லது ஒரு பதவியைப் பெற நீண்ட காலமாக முயற்சித்துக் கொண்டிருந்தால், இந்த வாரம் உங்கள் விருப்பம் நிறைவேறக்கூடும். வணிகரீதியாகவும் இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நிதிரீதியாக இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சவாலான காலகட்டமாக இருக்கும். வார தொடக்கத்தில் சில புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் ஏற்படும் சில திடீர் பெரிய மாற்றங்கள் பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம். இலக்குகளை அடைய நீங்கள் கூடுதல் கடின உழைப்பையும் முயற்சியையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். தொழில் பிரச்சனைகளுடன் வீட்டுப் பொறுப்புகளையும் நிறைவேற்றுவது உங்களுக்கு ஒரு சவாலாக இருக்கும். இந்த வாரம் ஆரோக்கிய பிரச்சினைகளைப் புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும். உறவினர்களுடன் ஏதாவது ஒரு பிரச்சனையால் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரம் மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் உங்களுக்கு நிதி இழப்பு மற்றும் அவமானம் ஏற்படக்கூடும். சில பெரிய பொறுப்புகள் திடீரென்று உங்கள் மீது விழும். இதை நிறைவேற்ற நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதகமற்றதாக இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தால், வாரத்தின் நடுப்பகுதியில் பணத்தை பரிவர்த்தனை செய்யும்போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வேலை செய்பவர்கள் பணியிடத்தில் எந்தவிதமான அலட்சியத்தையும் தவிர்க்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இந்த வாரம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். உங்களின் ஆசை நிறைவேறும். வீட்டிலும் வெளியிலும் உள்ளவர்களிடமிருந்து முழு உதவியும் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வேலை செய்பவராக இருந்தால், உங்கள் கடின உழைப்பும் முயற்சிகளும் பணியிடத்தில் உங்கள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். வணிக ரீதியாக உங்களுக்கு நல்லதாகவும் லாபகரமாகவும் இருக்கும். இந்த வாரம் உங்கள் வணிகம் மட்டுமல்ல, உங்கள் நற்பெயரும் வளரும். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

மகரம்

இந்த வாரம் கலவையாக இருக்கும். ஆரோக்கியம், உறவுகள் இரண்டிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பேசும் போதும், பழகும் போதும், எந்தவிதமான தவறான புரிதல்களும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். யாருக்கும் தவறான உறுதிமொழிகளை வழங்குவதையோ அல்லது யாரையும் புறக்கணிப்பதையோ தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், தொழில் ரீதியாக வாரத்தின் முதல் பாதி சற்று சவாலானதாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கு முன்பு அல்லது எந்தவொரு பெரிய விஷயத்திலும் முதலீடு செய்வதற்கு முன்பு ஒரு அனுபவம் வாய்ந்த நபரின் வழிகாட்டுதலைப் பெறுவது நல்லது.

கும்பம்

இந்த வாரம் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். எந்த வேலையிலும் அதிக கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் செலுத்தினால், அதில் அதிக வெற்றியும் லாபமும் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பெரிய பொறுப்புகள் அல்லது பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிக்கும். நிதி ரீதியாக இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வணிகம் தொடர்பாக நீங்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். பயணம் இனிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் வேலையில் கவனக்குறைவாக இருப்பதையும், உறவினர்களுடன் சண்டையிடுவதையும் தவிர்க்க வேண்டும். வேலையில் ஏற்படும் தடைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சரியான நேரத்தில் ஆதரவு கிடைக்காததால் மன அழுத்த சூழ்நிலைகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நிதி விஷயங்களில் கவனமாக முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள், இல்லையெனில் நீங்கள் ஏமாற்றப்படலாம். எதிரிகளிடம் கவனமாக இருங்கள். உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளைப் புறக்கணிக்காதீர்கள். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு கொஞ்சம் கடினமாக இருக்கலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, March 7, 2026, 22:26 [IST]
Desktop Bottom Promotion