Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...!
Kerala Chicken 65 Recipe in Tamil: அசைவம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சிக்கன்தான். உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் எடுப்பீர்களா? சிக்கன் 65 என்பது பெரும்பாலான நபர்களுக்கு பிடித்த சிக்கன் ஐட்டமாகும். எப்போதும் ஒரே சுவையில் சிக்கன் 65 செய்யாமல், ஒருமுறை கேரளா ஸ்டைல் சிக்கன் 65-யை முயற்சி செய்து பாருங்கள். இந்த சிக்கன் 65 நாம் வழக்கமாக எண்ணெயில் பொரித்து சாப்பிடுவது போன்று இல்லாமல், சற்று வறுவல் போன்று இருக்கும்.
சிக்கனை கொஞ்சம் வித்தியாசமாக அதேசமயம் நன்கு காரசாரமாக சமைத்து சாப்பிட நினைத்தால், இந்த மாதிரி கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்து சாப்பிடலாம். இந்த சிக்கன் 65 சாதம், பிரியாணி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இப்படி செய்யும் போது சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும் மற்றும் இந்த சிக்கன் 65 வழக்கமான சிக்கன் சுவையை விட வித்தியாசமான சுவையில் இருக்கும்.

உங்களுக்கு கேரளா ஸ்டைல் சிக்கன் 65 எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- அரை கிலோ சிக்கன்
- 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 2 ஸ்பூன் தயிர்
- 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
- 2 காஷ்மீர் சிவப்பு மிளகாய்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 சிட்டிகை மஞ்சள்
- 5 கருப்பு மிளகு
- 1 சிட்டிகை சோம்பு
- 1 இன்ச் கிராம் இலவங்கப்பட்டை
- அரை ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் எள்
- தேவையான அளவு உப்பு
- 1 முட்டை வெள்ளைக்கரு
- 2 ஸ்பூன் அரிசி மாவு
- 1 கொத்து கறிவேப்பிலை
- தேவையான அளவு தேங்காய் எண்ணெய்
செய்முறை:
- சிக்கனை முதலில் நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை சேர்த்து, அதில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து மேரினேட் செய்து 30 நிமிடங்கள் தனியாக வைக்கவும். முடிந்தால் குளிர்சாதன பெட்டியில் வைத்துக் கொள்ளவும்.
- அதன்பின் காஷ்மீர் மிளகாய், மஞ்சள், மிளகாய் தூள், கருப்பு மிளகு, சோம்பு, இலவங்கப்பட்டை மற்றும் சீரகத்தை அரைத்து, அதை ஊறவைத்த சிக்கனுடன் சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.
- பின்னர் கறிவேப்பிலை, எள், முட்டையின் வெள்ளைக்கரு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலக்கவும். இதை 10 நிமிடம் ஊற விடவும்.
- ஒரு கடாயில் சிக்கனை வறுக்கத் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- தேங்காய் எண்ணெய் சூடானதும் அதில் ஊற வைத்த சிக்கனை ஒவ்வொன்றாக போட்டு 5 முதல் 8 நிமிடம் வரை சிக்கன் பொன்னிறமாக மாறும் வரை நன்றாக வறுக்கவும்.
- இதேபோல அனைத்து சிக்கனையும் வறுக்கவும்.
- அவ்வளவுதான் சூடான சுவையான கேரளா ஸ்டைல் சிக்கன் 65 ரெடி. எலுமிச்சை பிழிந்து வெங்காயத்துடன் ரசித்து சாப்பிடுங்கள்.



Click it and Unblock the Notifications