For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தி ஊதுவது ஏன் என தெரியுமா?

|

குழந்தையில் இருந்து நாம் செய்து வரும் ஒரு பழக்கம். ஆனால், ஏன் செய்கிறோம், எதற்கு செய்கிறோம் என தெரியாது. நாம் இன்று செய்து வரும் பல செயல்கள் அப்படி தான் இருக்கிறது.

ஆனாலும், பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றி அதை ஊதிவிட்டு, கேக் வெட்டி ஊட்டிவிட்டு மகிழ்வது நமது வாழ்வில் ஒவ்வொரு வருடத்தின் முக்கிய நிகழ்வாக இருக்கிறது.

இது ஏன் என தெரியாமல் செய்வது சரியா? வாங்க தெரிஞ்சுக்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிரேக்க முறை!

கிரேக்க முறை!

பண்டைய காலத்து கிரேக்க முறை கலாச்சாரத்தில் அவர்கள் அவர்களது ஆண், பெண் தெய்வங்களை வணங்கும் போது மெழுகுவர்த்தி ஏற்றுவது வழக்கமாக இருந்து வந்தது.

ஆர்ட்டெமிஸ்!

ஆர்ட்டெமிஸ்!

பண்டைய கிரேக்கர்கள் அவர்களது நிலா கடவுளான ஆர்ட்டெமிஸ்-ஐ வணங்கும் போது கேக் வைத்து அதில் மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கும் முறையை பின்பற்றி வந்தனர்.

கேக்கில் மெழுகுவர்த்தி ஏன்?

கேக்கில் மெழுகுவர்த்தி ஏன்?

நிலாவை குறிக்கும் வகையில் வட்டமான வடிவில் கேக் அமைத்து ஆர்ட்டெமிஸ் கடவுளை கிரேக்கர்கள் வணங்கினர். அதில் மெழுகுவர்த்தி ஏற்றியதற்கு காரணம், வணங்கும் போது அது நிலா போன்றே ஜொலிக்கும் என்பது தான்.

ஜெர்மன் வழக்கம்!

ஜெர்மன் வழக்கம்!

நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே ஜெர்மன் வழக்கத்தில் கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றி கொண்டாடும் முறை இருந்து வருகிறது.

ஜெர்மன் மக்கள் கேக்கின் நடுவில் மெழுகுவர்த்தி ஏற்றி கொண்டாடுவதை லைட் ஆப் லைப் என்பதை குறிப்பிடும் வண்ணம் கடைப்பிடிக்கின்றனர்.

அறிஞர்கள் வாக்கு!

அறிஞர்கள் வாக்கு!

அறிஞர்கள் சிலர் கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றுவது, அதில் இருந்து வெளிப்படும் புகை வானில் வாழும் கடவுள்களின் வாழ்த்து பெற செய்கிறது என்றும் கூறியுள்ளனர். சிலர் அந்த புகை கெட்டவை நீங்குகின்றது என்பதை வெளிக்காட்ட என்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Do We Blow Out Birthday Candles?

We can't wait to blow out Birthday Candles? But before we do that, we were wondering… Why do we do that?
Story first published: Saturday, September 24, 2016, 11:38 [IST]
Desktop Bottom Promotion