Latest Updates
-
நவம்பர் 05, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வெற்றிகளை குவிக்கப் போறாங்களாம் -
தீபாவளியில் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வருமானம் இரட்டிப்பாகும்! உங்க ராசி இதுல இருக்கா? -
Diwali 2026 Horoscope: இந்த தீபாவளியில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Hair Care: கருகருனு நீளமான முடி வேணுமா? அப்ப தயிரை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க.. -
தீபாவளிக்கு பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வெண்டக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பச்சடி செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் 'வெங்காய தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
Dhanteras 2026: தந்தேராஸ் நாளில் குறைந்த பட்ஜெட்டில் மகாலட்சுமியின் அருளைப் பெற வாங்க வேண்டிய 5 பொருட்கள்! -
வாஸ்து படி உங்களோட தங்க நகைகளை வீட்டின் திசையில் மட்டும் வைக்காதீங்க - இல்லனா அவ்வளவுதான்
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஒருவர் எப்படிப்பட்டவராக இருப்பார், அவர்களின் ஆளுமையும் எதிர்காலமும் எப்படியிருக்கும் என்பதை நிர்ணயிப்பதில் அவர்களின் பிறந்த ராசி முக்கியப்பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு தனித்துவமான குணங்கள் உள்ளன, அதுதான் அவர்களை ஒருவரிடமிருந்து வித்தியாசமானவர்களாக காட்டுகிறது. பொதுவாக பெரும்பாலான ஆண்களின் கனவு அழகான பெண்களை ஈர்ப்பதாக இருக்கும், ஆனால் அந்த அதிர்ஷ்டம் அனைத்து ஆண்களுக்கும் இருப்பதில்லை.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்த ஆண்களுக்கு இந்த அதிர்ஷ்டம் இருக்கும். பெண்கள் வசீகரமானதாக கருதும் பல விஷயங்கள் அவர்களிடம் இயற்கையாகவே நிறைந்திருக்கும். அது உடல்ரீதியானதாக இருந்தாலும் சரி, அகநிலை சார்ந்ததாக இருந்தாலும் சரி, குறிப்பிட்ட ராசிகளில் பிறந்த ஆண்கள் பெண்களை வசீகரிப்பதில் நிபுணர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசி ஆண்கள் விளையாட்டுத்தனமானவர்கள், குறிப்பாக பெண்கள் அவர்கள் அருகில் இருக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம், பெண்கள் ரசிக்கும்படி சிறப்பான நகைச்சுவைகளைச் சொல்வதில் அவர்கள் வல்லவர்கள், அவர்கள் அருகில் இருக்கும் போது பெண்கள் சிரித்துக் கொண்டே இருப்பார்கள்.
அவர்களின் விளையாட்டுத்தனத்தால் அனைவரையும் ஈர்ப்பதற்கான ஆற்றல் அவர்களிடம் உள்ளது, குறிப்பாக பெண்களை. நகைச்சுவை உணர்வுடன்அவர்கள் கொஞ்சம் ரொமான்டிக்கானவர்களாக இருப்பதால் பெண்கள் அவர்களிடம் ஈர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஒட்டுமொத்தமாக, மேஷ ராசி ஆண்கள் நேரத்தைச் செலவிட ஒரு சிறந்த துணையாக பெண்களுக்கு இருப்பார்கள்.
சிம்மம்
ராசி சக்கரத்தில் சிம்ம ராசி ஆண்கள் மிகவும் கம்பீரமானவர்களாக அறியப்படுகிறார்கள். அவர்கள் பொதுவாக அழகான தோற்றத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள், மேலும் அனைவரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்ப்பதில் கில்லாடிகள். பெண்கள் இந்த குணங்களை மிகவும் கவர்ச்சிகரமானதாகக் கருதுகிறார்கள், எனவே சிம்ம ராசி ஆண்கள் பெண்களை எளிதில் வசியம் செய்துவிடுகிறார்கள்.
அவர்களின் ராசி அதிபதியான சூரியனைப் போலவே, அவர்கள் பிரகாசமானவர்கள் மற்றும் பெரும்பாலான பெண்களுக்கு ஒரு காந்தமா இருக்க விரும்புகிறார்கள். சிம்ம ராசி ஆண்களைத் தனித்துவமானவர்களாக மாற்றும் மற்றொரு குறிப்பிடத்தக்க பண்பு, அவர்களின் நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் மீதான அவர்களின் விசுவாசம். பெண்கள் எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசத்தை மதிக்கிறார்கள், எனவே அவர்களிடம் பெண்கள் எளிதில் ஏற்படுகிறார்கள்.
துலாம்
அழகான பெண்கள் இயல்பிலேயே துலாம் ராசி ஆண்களால் எளிதில் ஈர்க்கப்பட்டு விடுவார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகவும் சமநிலையானவராகவும், ஒழுங்கமைக்கப்பட்டவராகவும் இருப்பார்கள். பெண்கள் துலாம் ராசி ஆண்களை மிகவும் இனிமையான மற்றும் அமைதியான இயல்புடையவர்களாகக் காண்கிறார்கள்.
துலாம் ராசி ஆண்கள் மிகவும் கூச்ச சுபாவமுள்ள மற்றும் வித்தியாசமான ஆளுமை கொண்டவர்களாக அறியப்பட்டாலும், ஒரு பெண் சில காலம் அவர்களுடன் செலவிட்டால் விரைவில் அவர்கள் மீது காதலில் விழுவார்கள் என்பது உறுதி. அவர்கள் தங்கள் வாழ்க்கை மட்டுமின்றி அவர்களை சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையிலும், சமநிலையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறார்கள். இது அவர்களை பெண்கள் எளிதில் விரும்புபவர்களாக மாற்றுகிறது.
மகரம்
பெரும்பாலான பெண்கள் விரும்புவது ரொமான்டிக்கான ஆண்களைத்தான். மகர ராசி ஆண்களிடம் அதற்கு கொஞ்சமும் குறைவில்லை. அதுமட்டுமின்றி அவர்கள் அழகாகவும், அற்புதமான ஆளுமையுடனும் இருக்கிறார்கள். காதலில் விழுந்தவுடன், இந்த மகர ராசிக்காரர்கள் அந்த உறவை உயிருடன் வைத்திருக்க எதையும் செய்வார்கள், மேலும் தங்கள் அன்புக்குரியவர்களுக்காக எந்த ரிஸ்க்கையும் எடுக்க தயாராக இருப்பார்கள்.
மகர ராசி ஆண்களிடம் இருக்கும் மிகப்பெரிய நேர்மறையான குணம் அவர்களின் நேர்மைதான், அதுவே அவர்களை விட்டு யாரையும் விலகிச் செல்ல அனுமதிக்காது. பெண்கள் அவர்களிடம் உள்ள இந்த குணங்களைப் பாராட்டுகிறார்கள், மேலும்அவர்களிடம் ஆழமாக ஈர்க்கப்படுகிறார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

