பற்களுக்கு இடையே உள்ள இடைவெளி எதைக் குறிக்கிறது என்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

புன்னகைமிக்க முகம் ஒருவரின் அழகை மேலும் அதிகரித்துக் காட்டும். சிலருக்கு பற்களின் இடையே இடைவெளி இருப்பதால், அதை அசிங்கமாக எண்ணுவார்கள். மேலும் அதை சரிசெய்ய சிகிச்சைகளையும் மேற்கொள்வார்கள்.

ஆனால் அத்தகையவர்களுக்கு ஓர் நற்செய்தி. அது என்னவெனில் பல் ஜோதிடப் படி, பற்களின் இடையே இடைவெளி இருந்தால், அது மிகவும் அதிர்ஷ்டமாம். மேலும் அப்படிப்பட்ட பற்களைக் கொண்டவர்கள் துணிச்சல் மிக்கவர்கள்.

இதுப்போன்று ஏராளமான நல்ல குணங்கள் பற்களின் இடையே இடைவெளி கொண்டவர்களிடம் இருக்கும். இங்கு பற்களின் இடையே உள்ள இடைவெளி எதைக் குறிக்கிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிர்ஷ்டக்காரர்கள்

அதிர்ஷ்டக்காரர்கள்

நிறைய மக்களுக்கு பற்களின் இடையே இடைவெளி இருந்தால் பிடிக்காது. ஆனால் அது அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் ஒன்று என்பது தெரியுமா? நீங்கள் பற்களின் இடையே உள்ள இடைவெளியை பல் மருத்துவரைக் கொண்டு சரிசெய்ய விரும்பினால், உங்களைத் தேடி வரும் அதிர்ஷ்டத்தை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிகிறீர்கள் என்று அர்த்தம்.

நம்பிக்கை மற்றும் தைரியம்

நம்பிக்கை மற்றும் தைரியம்

முன் பற்களுக்கு இடையே இடைவெளி இருந்தால், நீங்கள் நம்பிக்கையானவர்கள் மற்றும் மிகுந்த தைரியத்தைக் கொண்டவர்கள் என்பதைக் குறிக்கும். சொல்லப்போனால் உங்களுக்கு ரிஸ்க் எல்லாம் ரஸ்க் சாப்பிடுவது போல். மற்றவர்களால் முடியாத எந்த ஒரு கஷ்டமான காரியத்தையும் தைரியத்துடன் மேற்கொள்வீர்கள்.

எதிலும் வெற்றி

எதிலும் வெற்றி

பற்களுக்கு இடையே இடைவெளி உள்ளவர்கள், எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி அடையாமல் ஓயமாட்டார்கள். அந்த அளவில் இவர்கள் வெற்றியை ருசி காண விரும்புபவர்கள். அவர்களின் முயற்சிக்கு ஏற்ப வெற்றியும் அவர்களுக்கே வந்து சேரும்.

புத்திசாலி

புத்திசாலி

முன் பற்களிடையே இடைவெளி இருப்பவர்கள் மிகவும் புத்திசாலி மற்றும் கற்பனைவளமிக்கவர்கள். மேலும் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருப்பார்கள்.

சிறந்த பேச்சாளர்

சிறந்த பேச்சாளர்

இம்மாதிரியான பற்களைக் கொண்டவர்கள் எப்போதும் பேசிக் கொண்டே இருப்பார்கள். நாள் முழுவதும் பேச சொன்னாலும் சற்றும் தளராமல் பேசுவார்கள். இந்த பேச்சாற்றலை அவர்களது அலுவலகத்தில் காண்பித்தால், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

நல்ல நிதி மேலாளர்

நல்ல நிதி மேலாளர்

பற்களுக்கு இடையே இடைவெளி உள்ளவர்கள், நிதி பிரச்சனைகளை பயனுள்ள முறையில் சமாளிப்பார்கள். இவர்களிடையே நல்ல சேமிப்பு பழக்கம் இருப்பதால், நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை புத்திசாலித்தனமாக கையாள்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Does Gap Between Your Teeth Signify?

Do you know what does gap between your teeth signify? Read on to know more...
Story first published: Tuesday, March 1, 2016, 15:23 [IST]
Subscribe Newsletter