Latest Updates
-
சிக்கன் எடுத்தா.. இப்படி மசாலா அரைச்சு கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 05 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சுக்கிரன் சூரியன் ஆளும் ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 5 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா தஞ்சாவூர் கொத்சு செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வார ராசிபலன் (05 July 2026-11 July 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
நெல்லை ஸ்டைல் தேங்காய்ப்பால் கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
200 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள்வதற்கு காரணமாக இருந்தது இந்த 5 விஷயங்கள்தான் -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பால் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
கோவை ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க
Kovai Special Arisi Paruppu Sadam Recipe In Tamil: தற்போது கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அடுப்பில்லாமல் செய்யக்கூடிய ரெசிபிக்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு வேளை சமையலையும் சட்டென்று சிம்பிளாக முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அப்படி விரைவில் சமையலை முடிக்க வேண்டுமானால், ஒன்-பாட் ரெசிபிக்களை ட்ரை செய்ய வேண்டும். இந்த ஒன்-பாட் ரெசிபிக்களுள் நிறைய உள்ளன. அதில் கோவையில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி தான் அரிசி பருப்பு சாதம்.
இந்த அரிசி பருப்பு சாதத்தை எப்படி செய்வதென்று மிகவும் பிரபலமான செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் தனது யூடியூப் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதுவும் அவரது அம்மா செய்து கொடுக்கும் அரிசி பருப்பு சாதம் ரெசிபியை செய்து காட்டியுள்ளார். முக்கியமாக இந்த அரிசி பருப்பு சாதத்திற்கு அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும் உருளைக்கிழங்கு கத்திரிக்காய் பொரியலையும் செய்து காட்டியுள்ளார்.

உங்களுக்கு செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் அரிசி பருப்பு சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைல் அரிசி பருப்பு சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரிசி பருப்பு சாதம் செய்வதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி (நறுக்கியது)
* தக்காளி - 2 (பெரியதாக நறுக்கியது)
* சாம்பார் தூள் - 2 ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 கப்
* அரிசி - 1/2 கிலோ
* துவரம் பருப்பு - 150 கிராம்
* இடித்த மிளகு, சீரகம் - சிறிது
* இடித்த பூண்டு - சிறிது
* துருவிய தேங்காய் - சிறிது
கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியலுக்கு..
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சாம்பார் தூள் - 2 ஸ்பூன்
* கத்திரிக்காய் - 4
* உருளைக்கிழங்கு - 2
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் 1/2 கிலோ அரிசி மற்றும் 150 கிராம் துவரம் பருப்பை
நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, நறுக்கிய பச்சை மிளகாயை
சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சாம்பார் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
குறைவான தீயில் வைத்து நன்கு சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் 2 கப் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* நீர் கொதிக்க ஆரம்பித்ததும், ஊற வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பை
கழுவி சேர்த்து கிளறி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் இடித்த மிளகு, சீரகம்
மற்றும் பூண்டு பற்களை தூவி, அதன் பின் துருவிய தேங்காயை சேர்த்து
நன்கு கிளறினால், சுவையான கோவை ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம்
தயார்.
* அதன் பின் பொரியலுக்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூட்னதும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அடுத்து அதில் சாம்பார் தூளை சேர்த்து குறைவான தீயில் வைத்து கிளறி
விட வேண்டும்.
* பின்பு அதில் சதுரத் துண்டுகளாக நறுக்கிய கத்திரிக்காய் மற்றும்
உருளைக்கிழங்கை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு, காய்கறிகள்
சுருண்டு வரும் வரை கிளறி இறக்கினால், கத்திரிக்காய் உருளைக்கிழங்கு
பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications