Latest Updates
-
June 2026 Horoscope: ஜூன் மாதம் இந்த 4 ராசிக்காங்க வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்கும் மாதமாக இருக்குமாம் -
சூரியனின் பார்வையால் ஜூன் முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கப்போகுது..! -
செஃப் தீனா ஸ்டைல் சிக்கன் தொக்கு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அசைவ உணவு அதிகம் உண்ணும் டாப் 10 இந்திய மாநிலங்கள் - முதலிடத்தில் எந்த மாநிலம் இருக்கு தெரியுமா? -
உங்ககிட்ட இந்த 7 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க உடம்பு ஆரோக்கியமா இல்லன்னு அர்த்தம்.. உஷார்.. -
மங்களூர் நெய் சிக்கன் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க, வேற லெவல் சைடிஷா இருக்கும் -
ஜூன் இறுதியில் உருவாகும் சக்தி வாய்ந்த அரிய யோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுது..! -
சூரியன் மிதுன ராசிக்கு செல்வதால் ஜூன் மாதத்தில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்தி, பூரிக்கு இந்த பக்குவத்துல சிக்கன் கெட்டி குழம்பை செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப சந்தோஷமா இருக்கப்போறாங்களாம்
கோடை வெயிலுக்கு ஏற்ற சுரைக்காய் சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
Summer Special Suraikkai Chutney Recipe In Tamil: வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படி கொளுத்தும் கோடையில் நீர்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் செய்வீர்களா? அந்த இட்லி, தோசைக்கு ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் சட்னி செய்ய வேண்டுமா?
உங்கள் வீட்டில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த சுரைக்காய் உள்ளதா? அப்படியானால் சுரைக்காயைக் கொண்டு சட்னி செய்யுங்கள். என்னது, சுரைக்காயில் சட்னியா என்று கேட்கலாம். இந்த சட்னிக்கு தேங்காய், வெங்காயம், தக்காளி என்று எதுவுமே தேவையில்லை. சுரைக்காயும், ஒருசில பொருட்களும் இருந்தாலே, அட்டகாசமான சுவையில் சத்தான சட்னியை செய்யலாம்.

இந்த சுரைக்காய் சட்னியை எப்படி செய்வதென்று அபூர்வாஸ் நலபாகம் என்னும் யூடியூப் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். கீழே சுரைக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4 (இரண்டு துண்டுகளாக்கப்பட்டது)
* பிஞ்சு சுரைக்காய் - 300 கிராம் (பொடியாக நறுக்கியது)
* புளி - சிறிய துண்டு
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், 1 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு மற்றும் 1
டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1/2 டீஸ்பூன் சீரகம், 1 இன்ச் இஞ்சி மற்றும் 4
பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய சுரைக்காயை சேர்த்து நன்கு சுருங்க
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சிறிய துண்டு புளியை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து குருங்க
வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலையை சேர்த்து நன்கு
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில்
சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்த்து கலந்து கொள்ள
வேண்டும்.
* இறுதியாக சட்னியை தாளிக்க ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் தாளிப்பதற்கு 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு,
உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து
சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான சுரைக்காய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications