Latest Updates
-
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
தமிழ் புத்தாண்டு நாளில் சுக்கிரனால் உருவாகும் ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பணம் பெருகும், தொழில் வளரும்!
Tamil New Year 2026: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட சுக்கிரன் தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார்.
வேத நாட்காட்டியின் படி, ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. அதுவும் புதிய தமிழ் ஆண்டான பராபவ ஆண்டு பிறக்கப் போகிறது. இந்த தமிழ் புத்தாண்டின் முதல் நாளில் செல்வத்தின் காரணியான சுக்கிரன் வருணனுடன் சேர்ந்து அர்த்த கேந்திர ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.

தற்போது வருணன் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் மற்றும் வருணன் 45 டிகிரி கோணத்தில் இருந்து அர்த்த கேந்திர யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். அதுவும் வெற்றிகள் குவியும், பணம் பெருகும், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இப்போது தமிழ் புத்தாண்டு நாளில் சுக்கிரன் மற்றும் வருணன் மூலம் உருவாகும் அர்த்த கேந்திர யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சுக்கிரன் வருணனால் உருவாகும் அர்த்த கேந்திர யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் வாழ்வின் பல வழிகளில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆளுமை மேம்படும். வியாபாரம் மற்றும் தொலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சமூகத்தில் மதிப்பும், மரியாதைம் அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
கும்பம்
தமிழ் புத்தாண்டு நாளில் சுக்கிரன் மற்றும் வருணன் மூலம் உருவாகும் அர்த்த கேந்திர யோகத்தால் ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலில் மகத்தான வெற்றியைப் பெறக்கூடும். வேலையில் மாற்றங்களை காண்பதோடு, முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
ரிஷபம்
தமிழ் புத்தாண்டில் உருவாகும் அர்த்த கேந்திர யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களின் தேவையற்ற செலவுகள் குறையும். பயணங்கள் அதிகரிக்கும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். முக்கியமாக சுக்கிரனின் அருளால் பண பிரச்சனைகள் தீரும். கடன் தொல்லைகளில் இருந்தும் விடுபடுவீர்கள்.
வியாபாரிகள் சற்று கவனமாக இருந்தால், நல்ல வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும் சோம்பலைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது நிதி இழப்பு மற்றும் பிற பிரச்சனைகளை சந்திக்க வைத்துவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



