Latest Updates
-
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா?
வாஸ்துப்படி, நைட் தூங்கும் முன் மறக்காம இந்த 3 விஷயங்களை செய்யுங்க.. செல்வம் பெருகும்!
Vastu Tips In Tamil: நமது வீட்டின் ஒவ்வொரு பகுதியுமே நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் நம் வீட்டின் சமையலறையானது வெறும் சமைப்பதற்கான இடம் மட்டுமல்ல, பூஜை அறையைப் போன்று மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது.
மேலும் குடியிருக்கும் வீட்டில் வாஸ்து விதிகளை பின்பற்ற வேண்டியது அவசியம். இப்படி வாஸ்துப்படி கட்டப்பட்டுள்ள மற்றும் வாஸ்து விதிகள் பின்பற்றப்படும் வீட்டில் லட்சுமி தேவியும், அன்னபூரணி தேவியும் வசிப்பதாக கூறப்படுகிறது.

அதுவும் வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒரு வீட்டின் சமையலறை அந்த வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம், அதிர்ஷ்டம் மற்றும் நிதி நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட சமையலறையில் சிறு தவறு செய்தாலும், அது அந்த வீட்டின் நிதி நிலை மகிழ்ச்சி போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உங்கள் வீட்டில் பணப்பிரச்சனை எதுவும் ஏற்படாமல், செல்வ செழிப்போது வீடு இருக்க வேண்டுமென்று விரும்பினால், இரவு தூங்கும் முன்பு 3 விஷயங்களை தவறாமல் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வாழ்வில் ஒரு நல்ல மாற்றங்களைக் காணலாம்.
1. அடுப்பை சுத்தம் செய்யாமல் இருப்பது
நாள் முழுவதும் சமைக்க உதவிய அடுப்பை, தூங்கும் முன் மறக்காமல் சுத்தம் செய்ய வேண்டும். பொதுவாக சமைக்கும் போது அடுப்பின் மேல் உணவுகளோ, அழுக்கோ படியக்கூடும். அப்படி படிந்த அழுக்கை அவ்வப்போது துடைத்து சுத்தம் செய்து விட வேண்டும்.
முக்கியமாக இரவு தூங்கும் முன் அடுப்பை பளபளவென்று ஜொலிக்கும் வகையில் சுத்தம் செய்ய வேண்டும். ஒருவேளை சுத்தம் செய்யாமல் அழுக்குடனே தூங்க சென்றால், எதிர்மறை ஆற்றல் அதிகரித்து, வீட்டில் பலவிதமான பிரச்சனைகள் எழத் தொடங்கும். எனவே இரவு தூங்கும் முன் அடுப்பை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். இது வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
2. பாத்திரம் கழுவாமல் இருப்பது
இரவு சமைத்து சாப்பிட்ட பின், சமையலறை தொட்டியில் உள்ள அழுக்கு பாத்திரங்களை கழுவிய பின்னர் தான் தூங்க செல்ல வேண்டும். சோம்பேறித்தனப்பட்டு பாத்திரங்களை தூங்கும் முன் கழுவாமல், காலையில் எழுந்து கழுவினால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இதன் விளைவாக குடும்ப உறுப்பினர்களிடையே சண்டை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமும் பாழாகும். அதுமட்டுமின்றி, பண பிரச்சனைகளையும் அதிகரிக்கும். எனவே தினமும் இரவு தூங்க செல்லும் முன் பாத்திரங்களை முழுமையாக கழுவி சுத்தம் செய்த பின் தூங்க செல்லுங்கள்.
3. லைட்டுகளை அணைப்பது
அனைவருமே இரவு தூங்க செல்லும் முன், வீட்டின் அனைத்து அறைகளிலும் உள்ள லைட்டுகளை அணைத்துவிடுவோம். ஆனால் வாஸ்துப்படி, வீட்டின் சமையலை எப்போதும் இருட்டாக இருக்கக்கூடாது. அப்படி சமையலறை இருட்டாக இருந்தால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். எனவே எப்போதும் இரவு தூங்க செல்லும் முன் சமையலறையில் ஒரு சிறிய லைட்டை எரிய விடுங்கள். இப்படி எரிய விடுவதன் மூலம், நேர்மறை ஆற்றல் ஓட்டம் சீராக இருந்து, வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிறைந்திருக்கும்.
முக்கியமாக இரவு சமையலறையை சுத்தம் செய்த பின், ஒரு டம்ளர் நீரை அடுப்பின் மேல் வைக்க வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். இப்படி செய்வதன் மூலம், வீட்டில் உள்ளோரின் கடன் சுமை குறையும். அதோடு இது மனதிற்கு அமைதி தருவதோடு, நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


