Latest Updates
-
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும்
தலைமுடி ஆரோக்கியமா, அடர்த்தியா வளரணுமா? அப்ப கிச்சனில் உள்ள இந்த நேச்சுரல் ஷாம்புக்களை ட்ரை பண்ணுங்க..
Natural Shampoo Alternatives In Tamil: தலைமுடியை அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள உதவும் ஒரு தலைமுடி பராமரிப்பு பொருள் தான் ஷாம்பு. இந்த ஷாம்புக்களில் சல்பேட்டுகள் மற்றும் கடுமையான ரசாயனங்கள் உள்ளன. இவை ஸ்கால்ப்பில் உள்ள அதிகப்படியான எண்ணெய்கள், அழுக்குகள் போன்றவற்றை நீக்க உதவுகின்றன.

ஆனால் சில சமயங்களில் இந்த ஷாம்புக்கள் ஸ்கால்ப்பில் உள்ள இயற்கை எண்ணெயை நீக்கி, தலைமுடியின் மென்மைத்தன்மையை போக்கி, தலைமுடியை ஆரோக்கியமற்றதாகவும், அதிகளவில் தலைமுடியை உதிரவும் வைக்கும். உங்களுக்கும் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புக்களால் தலைமுடி அதிகமாக உதிர்வதோடு, தலைமுடி வறண்டு போகிறதா?
அப்படியானால் தலைமுடியை மென்மையாக வைத்துக் கொள்ள நம் வீட்டு சமையலறையில் உள்ள நேச்சுரல் ஷாம்புக்களை பயன்படுத்துங்கள். இதனால் முடியின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, தலைமுடியும் சுத்தமாக இருக்கும்.
1. பூந்திக்கொட்டை
பழங்காலம் முதலாக தலைமுடியைப் பராமரிக்க பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு பொருள் தான் பூந்திக்கொட்டை. இந்த பூந்திக்கொட்டை மிதமான அளவில் நுரையை உருவாக்குவதால், அது ஸ்கால்ப்பில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெயை நீக்குகிறது. மேலும் இது பொடுகைக் குறைக்க உதவுகிறது மற்றும் தலைமுடியை பட்டுப்போன்று மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதற்கு சிறிது பூந்திக்கொட்டையை இரவு தூங்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் அதை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அந்நீரை ஷாம்பு போன்று பயன்படுத்தலாம்.
2. கடலை மாவு
கடலை மாவைக் கொண்டு சருமத்திற்கு மட்டும் தான் பராமரிப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், அது தவறு. இந்த மாவைக் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்பு கொடுக்கும் போது, அதிகப்படியான எண்ணெய் பசை, அழுக்குகள் நீங்குவதேடு, ஸ்கால்ப்பும் நன்கு ஈரப்பதத்துடன் இருக்கும். அதற்கு கடலை மாவை நீர் அல்லது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, தலைமுடியில் தடவி சிறிது நேரம் கழித்து தலைமுடியை தேய்த்து அலச வேண்டும்.
3. கற்றாழை ஜெல்
நற்பதமான கற்றாழை ஜெல் ஸ்கால்ப்பை சுத்தம் செய்ய உதவுவதோடு, தலைமுடியை நீரேற்றத்துடனும், மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவும். அதுவும் இதில் உள்ள இதமான பண்புகள் , ஸ்கால்ப்பில் ஏற்படும் எரிச்சலை தணிப்பதோடு, வறட்சியைக் குறைக்கும். மேலும் கற்றாழை தலைமுடிக்கு பொலிவையும் தருகிறது. அதற்கு கற்றாழை ஜெல்லை சிறிது நீர் சேர்த்து கலந்து, அதை ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
4. தயிர்
தயிர் தலைமுடியை சுத்தம் செய்யும் ஒரு நேச்சுரல் ஹேர் கிளின்சராகவும், கண்டிஷனாரகவும் செயல்படுகிறது. அதுவும் இதில் உள்ள புரோட்டீன்கள் மற்றும் லாக்டிக் அமிலம், ஸ்கால்ப்பை சுத்தப்படுத்துவதோடு, வறண்ட தலைமுடியை மென்மையாக்குகிறது. எனவே உங்களுக்கு தேங்காய் நார் போன்று தலைமுடி இருந்தால், தயிரை தலைமுடியின் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
5. அரிசி நீர்
அரிசி நீரில் வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இவை தலைமுடியை வலிமையாக்குவதோடு, தலைமுடியை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இது ஸ்கால்ப்பை சுத்தம் செய்து, தலைமுடி உதிர்வதையும் குறைக்கிறது. அதற்கு அரிசி வேக வைத்த நீரை வடிகட்டி, அதைக் கொண்டு தலைமுடியை அலசுங்கள். இது பலவீனமான தலைமுடியை வலிமையாக்குகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

