Latest Updates
-
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்!
ஜூலை இறுதியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
Mars Venus Make Kendra Drishti Yog On 29 July 2026: இந்த ஆண்டின் ஜூலை மாதம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இம்மாதத்தில் பல்வேறு யோகங்கள் உருவாகின்றன. அதுவும் ஜூலை மாதத்தின் இறுதியில், அதாவது ஜூலை 29 ஆம் தேதி ஒரு சக்தி வாய்ந்த யோகம் உருவாகவுள்ளது. அது தான் கேந்திர திருஷ்டி யோகம்.

முக்கியமாக இந்த யோகமானது அசுரர்களின் குருவாக கருதப்படும் மற்றும் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் மற்றும் கிரங்களின் அதிபதியும், தைரியமும், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியான செவ்வாயால் உருவாகவுள்ளது.
இந்த யோகத்தின் போது சுக்கிரனும், செவ்வாயும் ஒருவருக்கொருவர் 90 டிகிரி கோணத்தில் இருப்பார்கள். இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படவுள்ளது. குறிப்பாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றமும், தொழிலில் நல்ல வளர்ச்சியையும் காணவுள்ளனர். இப்போது ஜூலை இறுதியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் கண்போம்.
மேஷம்
செவ்வாய் மற்றும் சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் மேஷ ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். ஒவ்வொரு செயலிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நல்ல பொருள் இன்பங்களைப் பெறக்கூடும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சிம்மம்
செவ்வாய் மற்றும் சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு வலுவடையும்.
கன்னி
செவ்வாய் மற்றும் சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலில் பெரிய அளவில் வெற்றியைப் பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் நிறைய கிடைக்கும்.
துலாம்
செவ்வாய் மற்றும் சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் துலாம் ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நிதி நிலைமை வலுவடையும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


