வார ராசிபலன் (16 August 2026 - 22 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா

Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

Weekly Horoscope For 16 August 2026 To 22 August 2026 In Tamil

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2026 ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் 2026 ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி இழப்புகள் மற்றும் அவதூறுக்கு வழிவகுக்கும் என்பதால், குறுக்குவழிகளைத் தவிர்க்க வேண்டும். திடீரென்று ஒரு நீண்ட தூர வேலைப் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். எதிர்பாராத சில பெரிய செலவுகள் ஏற்படக்கூடும். நீங்கள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தால், எந்தவொரு திட்டத்திலும் பணத்தை முதலீடு செய்யும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த வாரம், உங்கள் செலவுகள் உங்கள் வருமானத்தை விட அதிகமாக இருக்கும். மாணவர்கள் விரும்பிய வெற்றியை அடைய கடினமாக உழைக்க வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு கலவையானதாக இருக்கும். வீட்டிலும், உறவுகளில் பதட்டம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் உணர்வுகளை புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும். வணிகர்கள் தங்கள் வணிகத்தில் தடைகளை சந்திக்க நேரிடும். அவசரம் இழப்புகளுக்கு வழிவகுக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால் பொறுமையாக இருந்தால், அனைத்தையும் சமாளிக்கலாம். நிதி ரீதியாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவசர முதலீடுகள் இழப்பை ஏற்படுத்தலாம். இந்த வாரம் உடல் சோர்வு அதிகரிக்கும். எனவே ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். செல்வாக்கு மிக்க நபர் அல்லது நெருங்கிய நண்பர்களின் உதவி மூலம் கடந்த கால பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். நீங்கள் வியாபாரியாக இருந்தால், இந்த வாரம் நிதி பரிவர்த்தனைகளில் சற்று எச்சரிக்கையுடன் முடிவுகளை எடுக்க வேண்டும். வாரத்தின் முதல் பாதியில் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நற்பலன்களைக் கொடுக்கும். வாரத்தின் பிற்பகுதியில் உங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் இருப்பவர்களுக்கு புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் உருவாக்கப்படும். மாணவர்கள் தங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும், திட்டமிட்ட முறையில் உழைத்தால், எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியும் லாபமும் கிடைக்கும். சோம்பலை விட்டுவிட்டு கடினமாக உழைக்க வேண்டும். வாரத்தின் தொடக்கத்தில், லாபகரமான திட்டத்தில் சேர வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளிடமிருந்து ஆதரவு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். காதல் உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். மொத்தத்தில் இந்த வாரம் சோம்பலை விட்டுவிட்டு வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சவாலானதாக இருக்கும். வார தொடக்கத்தில் இருந்து உங்களுக்கு ஏராளமான பொறுப்புகள் இருக்கும். பணியிடத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழிலதிபர்கள் இந்த வாரம் ஏற்ற தாழ்வுகளை சந்திப்பார்கள். இருப்பினும் வாரத்தின் நடுப்பகுதியில் வணிகத்தில் வளர்ச்சியைக் காணலாம். ஆனால் இந்த வாரம் ஆபத்தான முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் எந்த ஒப்பந்தத்தையும் கவனமாக ஆராய வேண்டும். எதிர்பாராத பெரிய செலவுகள் ஏற்படலாம். மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் போகலாம். சில விஷயங்களில் உடன்பிறப்புகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் குறித்த கவலைகள் அதிகரிக்கலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை வலுபெறும். பணிபுரிபவர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். வேலையை மாற்றும் எண்ணத்தில் இருந்தால், இம்மாதத்தில் நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும் இம்மாதத்தில் அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வாரத்தின் நடுப்பகுதியில், சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மற்றவர்களுடன் பழகும்போது நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கலாம். உங்கள் தொழிலில் எதிர்பாராத சில முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டியிருக்கலாம். வியாபாரத்தில் ஏற்படும் மந்தநிலை உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டால், உங்கள் நலம் விரும்பிகளின் ஆலோசனையைப் பெறுங்கள். வேலை செய்பவர்கள் வாரத்தின் பிற்பகுதியில் நீண்ட அல்லது குறுகிய தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணம் மிதமான பலனைத் தரும். உறவுகளைப் பொறுத்தவரை சுமாராக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு நிம்மதியான வாரமாக இருக்கும். செல்வாக்கு மிக்க நபர் அல்லது நெருங்கிய நண்பர்களின் உதவி மூலம் கடந்த கால பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். நீங்கள் வியாபாரியாக இருந்தால், இந்த வாரம் நிதி பரிவர்த்தனைகளில் சற்று எச்சரிக்கையுடன் முடிவுகளை எடுக்க வேண்டும். வாரத்தின் முதல் பாதியில் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நற்பலன்களைக் கொடுக்கும். வாரத்தின் பிற்பகுதியில் உங்கள் நிதி நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலை செய்பவர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும். மாணவர்கள் தங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று போராட்டம் நிறைந்ததாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காது. இந்த வாரம் உங்களின் வேலைகள் சரியாக முடிக்கப்படாததால், மனதில் அமைதியின்மை ஏற்படும். நிதி விஷயங்களில் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுங்கள். இந்த வாரம் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சில தற்காலிக பிரச்சினைகள் ஏற்படலாம்.

மகரம்

இந்த வாரம் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். எந்த வேலையிலும் அதிக கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் செலுத்தினால், அதில் அதிக வெற்றியும் லாபமும் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பெரிய பொறுப்புகள் அல்லது பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிக்கும். நிதி ரீதியாக இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வணிகம் தொடர்பாக நீங்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். பயணம் இனிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த வாரம் வியாபாரிகள் பெரிய ஆதாயங்களைப் பெறலாம். சிக்கிய பணத்தையும் திரும்பப் பெறுவீர்கள். இதனால் உங்களின் அனைத்து வேலைகளும் சுமூகமாக முடியும். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தினரின் கருத்துக்களை புறக்கணிக்காதீர்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் அவர்கள் தங்கள் இலக்குகளில் இருந்து விலகலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக இருக்கும். வருமானம் அதிகரிப்பதால் உங்களின் பொருளாதார பிரச்சனைகள் தீரும் மற்றும் செலவுகள் குறையும். இதனால் நீங்கள் அதிகமாக சேமிக்க முடியும். வேலையை மாற்ற இந்த வாரம் சாதகமாக இருக்கும். சிலருக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். பங்குச் சந்தையில் வேலை செய்பவர்கள் தங்கள் பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வேண்டும். வீட்டில் யாரேனும் திருமணமானவர்கள் இருந்தால் அவர்களது திருமணம் பற்றி பேசலாம். வாழ்க்கைத் துணையுடன் இந்த வாரம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்க்க, ஓய்வின்றி வேலை செய்வதைத் தவிர்க்கவும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, August 15, 2026, 20:19 [IST]
Desktop Bottom Promotion