Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
உணவு உண்ட பின் வாக்கிங் போகலாமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க..
Walking after Eating Benefits In Tamil: உடற்பயிற்சிகளிலேயே மிகவும் எளிமையான, அதே வேளையில் உடலுக்கு பல வகைகளில் நன்மைகளை தரக்கூடிய உடற்பயிற்சி என்றால் அது வாக்கிங் தான். நிறைய பேர் இந்த நடைப்பயிற்சியை காலையில் அல்லது மாலை வேளைகளில் மேற்கொள்வார்கள். ஆனால் இந்த வாக்கிங் பயிற்சியை உணவு உண்ட பின் மேற்கொள்ளலாமா என்ற கேள்வி பலரது மனதிலும் இருக்கும். ஏனெனில் உணவு உண்ட பின் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்று பலர் சொல்வார்கள். ஆனால் அது தீவிரமான உடற்பயிற்சிகளே தவிர, நடைப்பயிற்சி போன்ற எளிய பயிற்சி அல்ல.

சொல்லப்போனால் உணவு சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் வாக்கிங் செல்வது நாம் எதிர்பாராத அளவில் உடலுக்கு பல நன்மைகளைத் தரும். டாக்டர் பிள்ளை அவர்களும் தனது சமூக வலைத்தள பக்கத்தில், சாப்பிட்ட உடனே நடக்கலாமா கூடாதா, அப்படி நடந்தாலும் எவ்வளவு நேரம் நடக்கலாம் மற்றும் சாப்பிடதும் நடப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பன போன்ற பலரது மனதில் உள்ள கேள்விகளுக்கு விளக்கமளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "நாம் உண்ணும் உணவு செரிமானம் அடைந்து மலக்குடல் வழியாக மலமாக வெளியேறுகிறது. பொதுவாக நமது உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் சாப்பிடும் போது செரிமானத்திற்காக வயிற்றுப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். அப்போது மூளைக்கு இரத்த ஓட்டம் மிகவும் குறைவான அளவில் குறையும். அப்படி குறைவதால் தான் உணவு உண்ட பின் தூக்கம் வருகிறது. இது சிறிது நேரத்தில் சரியாகிவிடும். ஆனால் உணவு உண்ட பின் நடக்கலாமா என்றால், நல்லது தான். அதுவும் நீண்ட நேரம் நடக்கக்கூடாது மற்றும் ஜாக்கிங், ரன்னிங் போன்றவற்றையும் மேற்கொள்ளக்கூடாது. சாதாரணமாக ரிலாக்ஸாக நடக்க வேண்டும்." என்று கூறினார்.
எப்போது நடப்பது நல்லது? எவ்வளவு நேரம் நடக்கலாம்?
"குறிப்பாக காலை மற்றும் மதிய வேளைகளை விட இரவு நேரத்தில் கட்டாயம் உணவு உண்ட பின் நடக்க வேண்டும். இப்படி இரவு நேர உணவுக்கு பின் நடக்கும் போது நல்ல தூக்கம் வரும். எவ்வளவு நேரம் நடக்கலாம் என்றால், ஆரம்பத்தில் 10 நிமிடம் நடக்க தொடங்குங்கள். பின் படிப்படியாக 15 நிமிடம், 20 நிமிடம் என்று அதிகரித்துக் கொள்ளுங்கள். அதிகபட்சமாக 30 நிமிடம் வரை நடக்கலாம். அதுவும் வேகமாக நடக்காமல், இயல்பாக பேசிக் கொண்டே நடக்கலாம்" என்று கூறினார்.
சாப்பிட்டவுடன் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள்
1. செரிமான பிரச்சனைகள் நீங்கும்
"உணவு உண்ட பின் நடக்கும் போது அசிட்டிட்டி/அமிலத்தன்மை குறையும், மலச்சிக்கல் நீங்கும், வாய்வு தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்" என்று டாக்டர் கூறினார்.
2. மன அழுத்தம் குறையும்
"உணவு உண்ட பின் நடக்கும் போது மன அழுத்தம் குறைவதாக ஆய்வுகளில் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம் உடலில் உள்ள எண்டோர்பின் என்னும் கெமிக்கல் உணவுக்கு பின் நடக்கும் போது சுரக்கப்படுகிறது. இந்த எண்டோர்பின் வேலை மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும். எனவே உணவுக்கு பின் நடக்கும் போது மன அழுத்தம் குறைந்து மனம் ரிலாக்ஸாக இருக்கும்" என்று டாக்டர் கூறினார்.
3. சர்க்கரை அளவு குறையும்
"உணவு உண்ட பின் தூங்கினாலோ அல்லது சும்மா உட்கார்ந்திருந்தாலோ, உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் குளுக்கோஸாக மாறுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. அதுவே உணவு உண்ட பின் நடக்கும் போது, உண்ட உணவில் உள்ள குளுக்கோஸை தசைகள் ஆற்றலுக்கு பயன்படுத்தி, உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் குறைக்கிறது" என்று டாக்டர் பிள்ளை கூறினார்.
4. இதய ஆரோக்கியம் மேம்படும்
"பொதுவாக நமது உடலில் ஒரு இயக்கம் இருந்தவாறு இருக்கும். இதயம் துடித்து மற்ற உறுப்புகளுக்கு இரத்தத்தை வழங்கிக் கொண்டிருக்கும். சாப்பிட்டவுடன் நடக்கும் போது இதயத்தின் இயக்கம் சீராகி, மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கும். அதுவும் உண்ட பின் நடக்கும் போது உடலில் சர்க்கரை, கொழுப்பு சேராமல் இருப்பதால், மாரடைப்பு வருவதற்கான அபாயமும் குறைகிறது" என்று டாக்டர் கூறினார்.
5. நல்ல தூக்கம் கிட்டும்
"இரவு உணவு உண்ட பின் ஒரு 10 நிமிடம் நடக்கும் போது, நல்ல தூக்கம் கிடைக்கும். ஆய்வு ஒன்றிலும் சாப்பிட்ட உடனே தூங்குவதை விட, சாப்பிட்டு ஒரு 10 நிமிடம் வாக்கிங் சென்றுவிட்டு வந்து தூங்கும் போது, நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதாக கண்டுபிடித்துள்ளனர்" என்று டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! சாப்பிட்டதும் நடக்கலாமா என்றால் நடக்கலாம். எவ்வளவு நேரம் நடக்கலாம் என்றால் குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடக்கலாம். வேகமாக நடக்கலாமா, மெதுவாக நடக்கலாமா என்றால் மெதுவாக ரிலாக்ஸாக நடக்க வேண்டும். முக்கியமாக மூன்று வேளையும் உணவு உண்ட பின் 10 நிமிடம் வாக்கிங் போகலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

