இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா

தற்போதைய காலகட்டத்தில் டிவி இல்லாமல் ஒரு நாளை கூட நம்மால் கடக்க முடியாது. பொழுதுபோக்கு முதல் உலக நடப்புகளை தெரிந்து கொள்வது வரை அனைத்திற்கும் டிவி-தான் முதன்மையான சாதனமாக விளங்குகிறது. என்னதான் செல்போனிலேயே நாம் அனைத்தையும் பார்த்தாலும் டிவி-ல் பார்ப்பது போல இருக்காது.

People of This Country Are Not Allowed to Watch Their Preferred Channels

ஆனால் ஒரு நாட்டில் தொலைக்காட்சி இருந்தாலும், மக்கள் என்ன விஷயங்களை பார்க்க வேண்டுமென்பதை அரசாங்கமே முடிவு செய்கிறது. அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே மக்கள் பார்க்க வேண்டும், ஒருவேளை மக்கள் அனுமதிக்கப்படாத நிகழ்ச்சிகளைப் பார்த்தால் சிறை தண்டனை முதல் மரண தண்டனை வரை கூட வழங்கப்படலாம். எந்த நாட்டில் மக்களுக்கு இந்த கடுமையான விதிமுறைகள் உள்ளது மற்றும் அதற்கான காரணம் என்னவென்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எந்த நாட்டில் மக்கள் டிவி பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை?

'பூமியின் நரகம்' என்று அழைக்கப்படும் வட கொரியாவில்தான் மக்களுக்கு இந்த கடுமையான விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது. வட கொரியாவில் விற்பனை செய்யப்படும் தொலைக்காட்சிப் பெட்டிகள், அரசு அங்கீகரித்த அலைவரிசைகளை மட்டுமே பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தொலைக்காட்சியை வாங்கிய பிறகு, மக்கள் அதனை உள்ளூர் அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும். அதிகாரிகள் அலைவரிசைகளை லாக் செய்து, அந்த தொலைக்காட்சியின் மீது அதிகாரப்பூர்வ அரசு முத்திரை அல்லது ஸ்டிக்கரை ஒட்டுவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், பார்வையாளர்கள் அங்கீகரிக்கப்படாத ஒளிபரப்புகளைப் பார்க்க முடியாது என்பது உறுதி செய்யப்படுகிறது.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட சேனல்களை மட்டுமே பார்க்க வேண்டும்

வட கொரியத் தொலைக்காட்சிகள் பொதுவாக அரசு கட்டுப்பாட்டிலுள்ள ஒன்று முதல் நான்கு வரையிலான அலைவரிசைகளை மட்டுமே ஒளிபரப்புகின்றன. அந்த நான்கு சேனல்களில் 'கொரிய மத்தியத் தொலைக்காட்சி' (Korean Central Television) மிகவும் முக்கியமானது. சாதாரண குடிமக்கள் தங்கள் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழியாக வெளிநாட்டுச் செய்திகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அல்லது ஆன்லைன் ஊடகங்களை அணுகுவதற்கு எந்தவொரு சட்டப்பூர்வ வழியும் இல்லை.

ஊடகங்கள் சித்தாத்தங்களை பரப்பும் கருவியாக உள்ளது

ஊடகங்கள் சித்தாங்களைப் பரப்பும் கருவியாக கருதப்படுகிறது. இங்கு ஒளிபரப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஆளும் தலைமை மற்றும் அரசாங்கத்தின் சித்தாந்தத்தின் மீதான விசுவாசத்தை வலுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சிகள் பெரும்பாலும் தேசியத் தலைவர்களைப் புகழ்வதிலும், இராணுவச் சாதனைகளை முன்னிலைப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகின்றன. வெளிநாட்டு நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம், அரசியல், பொருளாதாரம் மற்றும் உலக நிகழ்வுகள் தொடர்பான விஷயங்களை மக்கள் தெரிந்து கொள்ளாமல் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் மாற்று சித்தாத்தங்கள், வெளிநாட்டுக் கலாச்சாரம் மற்றும் சர்வதேச விமர்சனங்கள் ஆகியவற்றிலிருந்து குடிமக்கள் பெருமளவில் பாதுகாக்கப்படுகிறார்கள்.

வெளிநாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்தால் அளிக்கப்படும் தண்டனைகள்

வெளிநாட்டு ஊடகங்களையும், நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கும் அல்லது பகிர்ந்து கொள்வதற்கும், குறிப்பாக தென் கொரியா அல்லது மேற்கத்திய நாடுகளின் உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கும் வட கொரியா கடுமையான தண்டனைகளை விதிக்கிறது. 'Reactionary Ideology and Cultural Rejection Law' படி தடைசெய்யப்பட்ட திரைப்படங்கள், நாடகங்கள் அல்லது இசையைப் பார்ப்பவர்கள் அல்லது பகிர்ந்துகொள்பவர்கள் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். இந்தத் தண்டனைகளில் பல ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தீவிரமான சூழல்களில் மரண தண்டனை கூட வழங்கப்படலாம் என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் தொலைக்காட்சியில் அரசாங்கம் செய்த லாக் சேதப்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காக, அதிகாரிகள் திடீர் வீட்டுச் சோதனைகளை நடத்துவதாகக் கூறப்படுகிறது.

Story first published: Friday, September 25, 2026, 11:04 [IST]
Desktop Bottom Promotion