ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Hotel Style Parotta Salna Recipe In Tamil: சப்பாத்தியை உங்கள் வீட்டில் அடிக்கடி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை பரோட்டா சால்னாவை செய்யுங்கள். இப்படி பரோட்டா சால்னா மட்டும் தனி சுவையில் இருக்க காரணம், அதில் சேர்க்கப்படும் ஒரு பொருள் தான். அது என்னவென்பது இந்த ரெசிபியின் செய்முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்த சால்னாவை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒருமுறை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்ய சொல்வார்கள்.

Hotel Parotta Salna How To Make Hotel Style Parotta Salna Recipe

உங்களுக்கு இந்த ஹோட்டல் பரோட்டா சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் பரோட்டா சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* பட்டை - 2
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* பிரியாணி இலை - 2
* கல்பாசி - சிறிது
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* பெரிய தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* அரைத்த மசாலா விழுது
* தண்ணீர் - 2 கப்
* புதினா - 1/4 கப்
* அரைத்த தேங்காய் விழுது
* சுடுநீர் - தேவையான அளவு

மசாலா அரைப்பதற்கு...

* பிரியாணி இலை - 2
* பட்டை - 3 துண்டு
* அன்னாசிப்பூ - 1
* ஏலக்காய் - 2
* கல்பாசி - 1 பெரிய துண்டு
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

தேங்காய் விழுதிற்கு..

* தேங்காய் - 1/2 மூடி (JUptaJ)
* கசகசா - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
* முந்திரி - 7
* தண்ணீர் - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் மசாலா அரைப்பதற்கு மிக்சர் ஜாரில் பிரியாணி இலை, பட்டை, அன்னாசிப்பூ, ஏலக்காய், கல்பாசி, சோம்பு, மிளகு, நறுக்கிய பாதி வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கல்பாசி, சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட்டு, நறுக்கிய தக்காளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கி பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் 2 கப் நீரை ஊற்றி கிளறி, உப்பு சுவை பார்த்து, பரோட்டா சால்னா சுவையைப் பெற புதினாவை சேர்த்து கலந்து, மூடி வைத்து 5-7 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், கசகசா, சோம்பு, பொட்டுக்கடலை, முந்திரி ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* சால்னா நன்கு கொதித்ததும் மூடியைத் திறந்து, அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, தேவையான அளவு சுடுநீரை ஊற்றி, 5 நிமிடம் எண்ணெய் பிரிய கொதிக்க வைத்து இறக்கி, சிறிது கொத்தமல்லி மற்றும் புதினாவை தூவி கிளறினால், சுவையான ஹோட்டல் பரோட்டா சால்னா தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, September 24, 2026, 22:20 [IST]
Desktop Bottom Promotion