அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்!

Gajkesari Rajyog On 04 October 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் மாதந்தோறும் தனது நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அக்டோபர் மாதத்தின் தொடக்கத்திலேயே மிகவும் அற்புதமான யோகம் உருவாகவுள்ளது. அதுவும் இந்த யோகமானது குரு பகவான் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகவுள்ளது. முக்கியமாக இந்த யோகமானது மங்களகரமான யோகங்களுள் ஒன்றாகும்.

Gajkesari Rajyog On 04 October 2026 These Zodiac Signs Will Be Lucky

வேத நாட்காட்டியின் படி, அக்டோபர் 04 ஆம் தேதி மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார். கடக ராசியில் குருவும் சந்திரனும் இணைவது ஜோதிடத்தில் ஒரு முக்கியமான தற்செயல் நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்த நிலை கஜகேசரி யோகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த யோகமானது அக்டோபர் 6 ஆம் தேதி இரவு சுமார் 10:17 மணி வரை நீடித்திருக்கும். அதன் பின் சந்திரன் சிம்ம ராசிக்குள் நுழைவார்.

இந்த கஜகேசரி யோகமானது ஒரு நபரின் வாழ்க்கையில் அறிவு, நிதி நிலை, தொழில் மற்றும் நற்பெயர் தொடர்பான நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு மிகவும் அற்புதமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது கடக ராசியில் குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

துலாம்

துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் குரு-சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறலாம். நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். எந்த வேலையை கையில் எடுத்தாலும், அதில் வெற்றி கிடைக்கும். வணிகர்கள் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இருப்பினும் முதலீடுகளை செய்யும் போது அவசரப்படுவதைத் தவிர்ப்பது நல்லது.

மகரம்

மகர ராசியின் 7 ஆவது வீட்டில் குரு-சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வருமான வழிகள் உருவாகும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். ஒரு முக்கியமான முடிவை எடுக்கும் போது வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறக்கூடும்.

கும்பம்

கும்ப ராசியின் 6 ஆவது வீட்டில் குரு-சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதன் விளைவாக வேலையில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படலாம். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்கள் தங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள். இருப்பினும், வெற்றிக்குத் தொடர்ச்சியான முயற்சி அவசியமாகும். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதிலும் கவனம் செலுத்தினால் நல்ல பலனைப் பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, September 24, 2026, 23:36 [IST]
Desktop Bottom Promotion