Latest Updates
-
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா?
Lucky Zodiac Signs In Next 3 Months In Tamil: 2026 ஆம் ஆண்டின் இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இன்னும் மூன்று மாதத்தில் 2027 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். ஜோதிடத்தின் படி, ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள் சிறப்பானதாக இருக்கும். அதுவும் இந்த மூன்று மாதங்களில் ஏற்படும் கிரகங்களின் நிலைகளின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும்.

அதில் அக்டோபர் மாதத்தில் ஒரு முக்கியமான கிரக பெயர்ச்சி நிகழவுள்ளது. அப்போது தேவர்களின் குருவான குரு பகவான் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். அதோடு ராகு-கேதுவும் தங்களின் நிலைகளை மாற்றவுள்ளனர். அதுமட்டுமின்றி, இக்காலத்தில் கிரகங்களின் நட்சத்திர மாற்றங்களும், கிரக சேர்க்கைகளால் யோகங்களும் உருவாகி, சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கும்.
இப்படி அதிர்ஷ்டம் பிரகாசிப்பதால், தொழில் முன்னேற்றம், நிதி உயர்வு, விரும்பிய வெற்றி, உறவுகளில் பிணைப்பு, புதிய வேலை வாய்ப்புகள் போன்றவற்றை கொண்டு வரக்கூடும். இப்போது 2026 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காணபோம்.
கடகம்
ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஒவ்வொரு வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் சாதகமான மாற்றங்களைக் காணக்கூடும். இக்காலத்தில் புதிய வேலையை தொடங்கினால், எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவீர்கள். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். சிலருக்கு வெளிநாட்டில் பணிபுரிவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை தொடர்பாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்கள் நல்ல ஆதாயங்களைத் தரக்கூடும்.
சிம்மம்
ஆண்டின் கடைசி 3 மாதங்கள் சிம்ம ராசிக்காரர்களுக்கு இனிமையதானதாக இருக்கும். உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்களின் செல்வாக்கு வழக்கத்தை விட அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் ஆசை இருந்தால், உங்களின் ஆசைகள் நிறைவேறும். நீண்ட காலமாக கைக்கு வராமல் சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். திட்டமிட்டு பொறுமையுடன் மேற்கொள்ளும் முயற்சிகளில் நல்ல பலனைப் பெறுவீர்கள். வியாபாரிகள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தை பெறுவார்கள். முக்கியமாக நல்ல பொருள் வசதிகள் அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்கள் சிறப்பானதாக இருக்கும். இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். தொழில் அல்லது வணிகம் தொடர்பாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். காதலித்து வந்தால், அந்த காதல் குடும்ப உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும். தொழில் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். உறவுகளில் பரஸ்பர நம்பிக்கையும், ஈர்ப்பும் அதிகரிக்கும். முக்கியமாக தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காணக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
