Latest Updates
-
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்!
Weight Loss Saamai Arisi Kanji Recipe In Tamil: தற்போது உடல் எடையால் நிறைய பேர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் அப்படி உடல் பருமனால் சிரமப்படுகிறீர்களா? அந்த உடல் எடையைக் குறைக்க ஜிம் செல்வது, டயட்டில் இருப்பது என்று இருக்கிறீர்களா? உங்கள் டயட்டில் எப்போதும் ருசி இல்லாத உணவுகள் தான் இருக்குமா? அதுவும் காலையில் ஒட்ஸ் கஞ்சியைத் தான் வேண்டா வெறுப்பாக சாப்பிடுவீர்களா? அப்படியானால் உடல் எடையைக் குறைக்கும் வகையிலும், சுவையானதாகவும் இருக்கக்கூடிய சாமை கஞ்சியை செய்து குடியுங்கள். இந்த கஞ்சி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த சாமை அரிசி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சாமை அரிசி கஞ்சி ரெசிபியின் எளிண செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சாமை - 1 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 4 பல் (நறுக்கியது)
* துருவிய இஞ்சி - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பீன்ஸ் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* ஊற வைத்த சாமை
* தண்ணீர் - 4 கப்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் சாமையை எடுத்துக் கொண்டு நீரில் 3
முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் நீரை ஊற்றி மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கறிவேப்பிலை
தூவி, வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய கேரட் மற்றும் பீன்ஸை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி, நன்கு வதக்கி, கேரட், பீன்ஸ் ஓரளவு
வெந்ததும், அதில் ஊற வைத்த சாமையை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் 4 கப் நீரை ஊற்றி, மிளகுத் தூள் சேர்த்து கிளறி, கொதி
வந்ததும் குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 4 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து பரிமாறினால், சுவையான சாமை கஞ்சி
தயார்.



Click it and Unblock the Notifications
