Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்!
Mercury Transit In Libra 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுகவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம், முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இவர் ஒரு ராசியில் 21 நாட்கள் வரை இருப்பார். தற்போது புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த புதன் செப்டம்பர் 26 ஆம் தேதி துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். இப்படி துலாம் ராசிக்கு புதன் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சிலருக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அதே வேளையில் சில ராசிக்காரர்கள் வேலை மற்றும் நிதி விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியிருக்கும்.
அந்த வகையில் புதன் செப்டம்பர் இறுதியில் துலாம் ராசிக்கு செல்வதால், 3 ராசிக்காரர்கள் பிரச்சனை மேல் பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதுவும் பணம், வேலை போன்றவற்றில் எதிர்பாராத அளவில் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். இப்போது புதன் துலாம் ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சிக்கல்களை சந்திப்பார்கள். நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க முடியாமல் சிரமப்படக்கூடும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களை ஏற்கும் முன் முழுமையாக ஆராய்ந்து, பின் முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது. செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், தேவையற்ற செலவுகளை கவனித்து கட்டுப்படுத்துங்கள். இக்காலத்தில் முதலீடுகளை செய்வதாக இருந்தால், அவசரப்பட்டு முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலையில் தன்னம்பிக்கை குறையும் மற்றும் பல தடைகளையும் சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக எதிர்பாராத செலவுகளை சந்திக்கக்கூடும். கடனாக கொடுத்த பணம் கிடைக்காமல் சிரமப்படுவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் அல்லது உடன் வேலை செய்வோருடன் பேசும் போது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். தொழிலதிபர்கள் பெரிய முதலீடுகளையும், முக்கிய முடிவுகளையும் எடுப்பதற்கு முன் கவனமாகச் சிந்திக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் கல்வி தொடர்பான விஷயங்களில் பொறுமையாக இருக்க வேண்டும். வேலை தேடிக் கொண்டிருந்தால், இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். வணிகர்கள் கூட்டுத் தொழில் செய்து வந்தாலோ அல்லது புதிய ஒப்பந்தங்களை ஒப்புக்கொள்ளும் முன்போ, ஆவணங்களையும் நிதி அம்சங்களையும் தவறாமல் சரிபார்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். வேலைகளை முடிக்க முடியாமல் சிரமப்படக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
