Latest Updates
-
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன?
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..
Foods To Lower Cholesterol In Tamil: உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், அது மாரடைப்புக்கு வழிவகுக்கும். எனவே இந்த கெட்ட கொலஸ்ட்ராலை உடலில் அதிகம் சேராமல் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்க சிறந்த வழி என்றால் அது உணவுகள் தான்.

பொதுவாக கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகரிக்கும் போது, அது இரத்த நாளங்களில் படிந்து, இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் இடையூறை ஏற்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே இந்த கொலஸ்ட்ராலைக் குறைக்க மருந்துகளை எடுப்பது மட்டுமின்றி, தினசரி உணவு பழக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
சொல்லப்போனால் நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலானது நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் ஆரோக்கியமற்ற உணவுகளின் மூலம் தான் அதிகரிக்கின்றன. ஆகவே சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.
அத்துடன் வழக்கமான உடற்பயிற்சி, போதுமான தூக்கம் மற்றும் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பதும் முக்கியம். ஏற்கனவே கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை மற்றும் பரிசோதனைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இப்போது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து காண்போம்.
1. அவகேடோ
அவகேடோ பழங்களில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளன. இந்த பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புக்கள் சேதம் விளைவிக்கும் சாச்சுரேட்டட் கொழுப்புக்களை மாற்ற உதவி புரியும். கூடுலாக அவகேடோ பழத்தில் ஆரோக்கியமான அளவில் தாவர ஸ்டெரோல்கள் உள்ளன. இவை இயற்கையாகவே குடலில் கொழுப்பை உறிஞ்சுவதைத் தடுக்கின்றன.
2. பாதாம் மற்றும் அக்ரூட் நட்ஸ்
இதயத்திற்கு நட்ஸ் மிகவும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஆகும். அதுவும் பாதாம், அக்ரூட் நட்ஸ்கள் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களால் நிரம்பியுள்ளன. இவை இரத்த நாளங்களை ஆரோக்கியமாகவும், மீள்தன்மையாகவும் வைத்திருக்கின்றன. முக்கியமாக இதில் தாவர அடிப்படையிலான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்ள் அதிகம் உள்ளன. இவை ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கவும், கெட்ட கொழுப்புக்களை ஆக்ஸிஜனேற்றம் செய்து, தமனிகளில் கொழுப்புகள் படிவதைத் தடுக்கும்.
3. பருப்பு மற்றும் பயறு வகைகள்
கருப்பு பீன்ஸ், கொண்டைக்கடலை, சிறுநீரக பீன்ஸ் மற்றும் பயறு போன்றவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளன. இந்த குறிப்பிட்ட வகை நார்ச்சத்து உங்கள் செரிமான மண்டலத்தில் ஒரு ஜெல்லை உருவாக்கி, கொழுப்புக்கள் அந்த ஜெல்லுடன் சேர்ந்து வெளியேற்றப்படுகின்றன. மேலும் இவை செரிமானமாக சிறிது நேரம் எடுத்துக்கொள்வதால், அவை உங்களை முழுமையாக உணர வைக்கின்றன மற்றும் உங்கள் இரத்த சர்க்கரையை உறுதிப்படுத்துகின்றன.
4. கொழுப்பு நிறைந்த மீன்கள்
சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்கள் வித்தியாசமான வழியில் கொழுப்புக்களை எதிர்த்து போராடுகின்றன. ஏனெனில் இவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இது இரத்த ட்ரைகிளிசரைடுகளை கடுமையாகக் குறைக்கிறது. எனவே வார விடுமுறை நாட்களில் இறைச்சிகளை வாங்கி உண்பதற்கு பதிலாக கொழுப்பு நிறைந்த மீன்களை எடுக்கும் போது, அது உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.
5. ஆலிவ் ஆயில்
இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் சமையலுக்கு எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயிலை சேர்த்து வாருங்கள். ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளன. இது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. எனவே இதய ஆரோக்கியத்திற்கும், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் தினசரி சமையலில் சாதாரண எண்ணெயை பயன்படுத்தாமல் எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயிலை சேர்த்து வாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
