Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
5 தக்காளி இருந்தா இந்த செட்டிநாடு தக்காளி கொத்தமல்லி சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்
Chettinad Tomato Coriander Chutney Recipe in Tamil: நம் தமிழ்நாட்டில் ஊருக்கு ஊர் விதவிதமாய் வித்தியாசமாய் உணவு வகைகளும் பலகாரங்களும் இருக்கின்றன. ஒரு ஊர் விட்டு இன்னொரு ஊருக்கு சென்றால் அவர்களின் பேச்சு வழக்கோடு பாரம்பரிய உணவு வகைகளும் மாறுபடும். ஒவ்வொரு உணவின் பெயர் மாறுவதோடு அவற்றின் சுவையிலும் மாற்றங்கள் இருக்கும்.

அந்த வரிசையில் செட்டிநாடு உணவுகளுக்கு என்று ஒரு தனி இடம் இருக்கிறது மக்களிடம். கடைகளின் பெயரில் கூட செட்டிநாட்டு உணவகம் என்று குறிப்பிடும் அளவிற்கான தனிச்சிறப்பு அது. செட்டிநாடு உணவுகளில் சட்னி வகைகளுக்கு தனியிடம் உண்டு. அப்படி இப்போது நாம் பார்க்கப் போவது செட்டிநாடு தக்காளி கொத்தமல்லி சட்னி.
உங்களுக்கு செட்டிநாடு தக்காளி கொத்தமல்லி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு தக்காளி கொத்தமல்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 5 நன்கு பழுத்த தக்காளி
- ¼ கப் கொத்தமல்லி இலைகள்
- 3 வர மிளகாய்
- 1 பச்சை மிளகாய்
- ¼ ஸ்பூன் புளி கரைசல்
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் வெல்லம்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- கால் ஸ்பூன் வெந்தயம்
- ¼ ஸ்பூன் பெருங்காயம்
- 1 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, 3 வர மிளகாயைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- நறுக்கிய 5 பழுத்த தக்காளி மற்றும் நறுக்கிய 1 பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் ¼ ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சட்னிக்குத் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- மூடி வைத்து மிதமான தீயில் 7-8 நிமிடங்கள் வேகவைக்கவும். தக்காளி நன்கு குழையும் வரை வேக வேண்டும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, கலவையை ஆறவிடவும்.
- இந்தக் கலவையுடன் 1 ஸ்பூன் வெல்லம், ¼ ஸ்பூன் கெட்டியான புளிக்கரைசல் ஆகியவற்றை மிக்சி ஜாரில் சேர்க்கவும். ¼ கப் புதிய கொத்தமல்லி இலைகளையும் சேர்க்கவும்.
- மென்மையான விழுதாக சட்னியை அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றி வாய்குவம்.
- ஒரு சிறிய கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். அதில் 1 வர மிளகாய், ½ ஸ்பூன் கடுகு மற்றும் கால் ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- கடுகு வெடிக்கத் தொடங்கியதும், ¼ ஸ்பூன் பெருங்காயத் தூள் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்க்கவும். இதை உடனடியாகச் சட்னியுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- அவ்வளவுதான் செட்டிநாடு தக்காளி கொத்தமல்லி சட்னி ரெடி. இதை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து, 5 நாட்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications