Latest Updates
-
தலையணையில் உள்ள மஞ்சள் நிற கறைகள் மற்றும் துர்நாற்றத்தை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
நடிகை சமந்தாவிற்கு பிடித்த பிஸிபேலேபாத் - எப்படி செய்யணும் தெரியுமா? -
பாம்பு இரத்தத்தை குடிக்கும் பழக்கமுள்ள நாடுகள் - இந்த வினோத பழக்கத்திற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
இதயத்துக்கு செல்லும் இரத்தக்குழாய்களை சுத்தமா வெச்சுக்கணுமா? அப்ப இந்த பானங்களை குடிங்க போதும்! -
ஹரா பரா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஏன் அனைத்து நாட்டு வீரர்களும் வெள்ளை நிற ஜெர்சியை மட்டும் அணிகிறார்கள் தெரியுமா? -
ஒரே நாளில் நடக்கும் குருபகவானின் ராசி மற்றும் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
பூஜைக்கு வாங்குன பொரி நமத்துப் போச்சா? அப்ப தூக்கி போடாம இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. -
அக்டோபர் 23, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
அக்டோபர் இறுதியில் உதயமாகும் சுக்கிரன்: இந்த 3 ராசிகளின் பணப்பிரச்சனை தீர்ந்து, வங்கி இருப்பு அதிகரிக்கும்..
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்க முன்னேற்றதுக்கு தடையாக இருக்கும் பழக்கம் எதுன்னு சொல்றோம்..
Numerology: நாம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும், இலக்குகளை அடைந்து வெற்றிகரமான நபராக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்காமல் போகலாம். இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், ஒருவரது பிறந்த தேதியும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஏனெனில் எண் கணிதத்தின் படி, ஒருவரின் பிறந்த தேதியை அடிப்படையாகக் கொண்டு அவருடைய குணாதிசயங்கள், பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்ளலாம். எப்படியெனில் ஒவ்வொரு எண்ணும் ஒவ்வொரு அதிபதிகளைக் கொண்டுள்ளன. அந்த அதிபதிகளைப் பொறுத்தே, அந்த எண்ணிற்குரியவரின் குணாதிசயங்களும் அமைவதாக கூறப்படுகிறது.
அதன்படி உங்கள் பிறந்த தேதிப்படி உங்கள் தொழிலில் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பழக்கங்கள் என்னவென்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
எண் 1
1, 10, 19 அல்லது 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்களிடம் ஈகோ அதிகமாக காணப்படும். இவர்கள் யார் பேச்சையும் கேட்கமாட்டார்கள் மற்றும் மற்றவர்கள் மீது அதிக ஆதிக்கம் செலுத்துவார்கள். இதனால் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகளை அதிகம் சந்திக்கக்கூடும்.
எண் 2
2, 11, 20 அல்லது 29 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள். மேலும் இவர்களிடம் தன்னம்பிக்கை இல்லாததால், அடிக்கடி இவர்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும்.
எண் 3
3, 13, 21 அல்லது 30 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிக தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வார்கள். மற்றவர்களை விட தங்களை உயர்ந்தவர்களாக நினைப்பார்கள். இதன் காரணமாக வாழ்க்கையில் நிறைய சிரமங்களை சந்திக்கக்கூடும்.
எண் 4
4, 13, 22 அல்லது 31 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களிடம் குறுக்குவழிகளை கண்டறியும் பழக்கம் இருக்கும். மேலும் இவர்களுக்கு கோபம் அதிகமாக வரும். இதுவே இவர்களின் தொழில் முன்னேற்றத்திற்கு பெரிய தடையாக இருக்கும்.
எண் 5
5, 14 அல்லது 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எந்த வேலையிலும் முழு கவனம் செலுத்துவது கடினம். ஏனெனில் இவர்கள் விரைவில் சலிப்படைவார்கள். இதனால் அடிக்கடி வேலையை மாற்றும் பழக்கம் இருக்கும். இது இவர்களின் வாழ்வில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வராது.
எண் 6
6, 15 அல்லது 24 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை வேகமாக நம்புவார்கள் மற்றும் இவர்கள் ஏமாற்றுபவர்களை சகித்துக் கொள்வார்கள். மேலும் அனைவரது பொறுப்பையும் தாங்களே எடுத்து செய்யும் பழக்கம் இருக்கும்.
எண் 7
7, 16 அல்லது 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்கள் முன் தங்களை வெளிப்படுத்தவோ, தங்கள் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தவோ முடியாது. இதனால் பெரும்பாலும் தனிமையால் பாதிக்கப்படுவார்கள்.
எண் 8
8, 17 அல்லது 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் கடினமாக உழைப்பார்கள். ஆனால் இவர்களுக்கு வெற்றியின் பலன் தாமதமாகவே கிடைக்கும். அதாவது பணியிடத்தில் பதவி உயர்வு தாமதமாக கிடைப்பதால், அதிகம் விரக்தியடைவார்கள்.
எண் 9
9, 18 அல்லது 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு கோபத்தில் கட்டுப்பாடு இருக்காது. எதையும் அவசரமாக செய்வதோடு, கோபம் வந்தால் எதையும் தூக்கி எறிந்துவிடுவார்கள். எனவே இவர்களின் வாழ்வில் ஸ்திரத்தன்மை இருக்காது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
