Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
நாக பஞ்சமியில் நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிகளின் பணக்கஷ்டம் தீர்ந்து, பண வரவு அதிகரிக்கப்போகுது! -
தமிழ்நாட்டில் கள்ளக்காதல் அதிகமிருக்கும் டாப் மாவட்டங்கள் - முதலிடத்தில் எந்த மாவட்டம் இருக்கு தெரியுமா? -
ஹோட்டல் ஸ்டைல் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சுட்டு கொட்டப்போகுதாம் -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 3 ராசிக்கு தொழில் ரீதியா அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கேரட்டும், ஜவ்வரிசியும் இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. பிள்ளைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
Nag Panchami 2026: நாக பஞ்சமியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
காரசாரமான சிக்கன் ஈரல் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 7 அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப அது குடல்வால் புற்றுநோயின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்..
Vastu Tips: வாஸ்துப்படி, வீட்டின் இந்த 4 இடத்தில் கண்ணாடியை வையுங்க.. வீட்டில் செல்வம் இரட்டிப்பாகும்!
Vastu Tips In Tamil: நாம் குடியிருக்கும் வீடு நேர்மறை ஆற்றல் நிறைந்து இருக்க வேண்டும். இப்படி நேர்மறை ஆற்றல் நிறைந்த வீடுகளில் செல்வம் பெருகுவதோடு, வீட்டில் உள்ளோர் தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், நல்ல செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களுமே அந்த வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் இந்த பொருட்கள் சரியான திசையில், சரியான இடத்தில் இருந்தால் தான் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதுவும் வாஸ்துப்படி ஒரு வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடி மிகச்சிறந்த ஆற்றல் மூலங்காக கருதப்படுகின்றன. அந்த கண்ணாடியை சரியான இடத்தில் வைத்தால், அது வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்.
அதுவும் வாஸ்துப்படி கண்ணாடிகளை வீட்டின் குறிப்பிட்ட 4 இடத்தில் தொங்கவிடும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிப்பதோடு, அந்த வீட்டில் பணத்தை குவிக்க உதவும். இப்போது வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் எந்த இடத்தில் கண்ணாடியை தொங்கவிட்டால் செல்வம் இரட்டிப்பாகும் என்பதைக் காண்போம்.
1. வடக்கு திசை
வாஸ்துப்படி, வடக்கு திசையானது குபேரர் குடியிருக்கும் திசையாக கருதப்படுகிறது. இந்த வடக்கு திசையில் கண்ணாடியை வைப்பது மிகவும் நல்லது. முக்கியமாக இந்த திசையில் கண்ணாடியை வைப்பதன் மூலம், வீட்டில் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். தொழிலதிபர்கள் மற்றும் தொழிலில் வளர்ச்சியை காண நினைப்பவர்கள், இந்த வடக்கு திசையில் கண்ணாடியை வைத்தால், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
2. வீட்டின் நுழைவாயில் அருகில்
வீட்டின் நுழைவாயிலில் கண்ணாடியை வைப்பது மங்களகரமானது. அதுவும் அந்த கண்ணாடியை வீட்டிற்கு வருவோர் அனைவரும் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் கதவுக்கு எதிரில் இருக்கக்கூடாது. கண்ணாடியை கதவிற்கு அருகில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில், அதுவும் வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்கும் போது, அது வீட்டிற்குள் வரும் அனைத்து நேர்மறை ஆற்றலையும் அது ஈர்த்து, அதனைச் சீராகப் பரப்புகிறது. இப்படி வீட்டில் நேர்மறை ஆற்றல் சீராக இருந்தால், வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
3. அலமாரிக்கு எதிரில் அல்லது செல்வம் வைக்கும் இடம்
வாஸ்து விதிகளின் படி, பணம், நகை போன்றவற்றை வைக்கும் அலமாரிக்கு எதிரில் ஒரு கண்ணாடியை வைப்பது மிகவும் மங்களகரமானது. இப்படி பண அலமாரிக்கு எதிரில் கண்ணாயை வைக்கும் போது, அதில் உள்ள பணம் கண்ணாடியில் பிரதிபலித்து, செல்வத்தை இரட்டிப்பாக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே உங்கள் வீட்டில் இதுவரை அலமாரிக்கு எதிரியில் கண்ணாடி இல்லாவிட்டால், உடனே ஒரு கண்ணாடியை தொங்கவிடுங்கள். இதனால் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.
4. டைனிங் டேபிளுக்கு எதிரில்
வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒன்றுகூடி சாப்பிடும் டைனிங் அறையில் கண்ணாடியை தொங்கவிடுவது பல நன்மைகளை கொண்டுவருவதாக கூறப்படுகிறது. அதுவும் டைனிங் டேபிளில் நிறைய உணவு இருக்கும் போது, அங்குள்ள கண்ணாடியில் உங்களை பார்க்கும் போதெல்லாம், அது உங்கள் வீட்டில் உணவு மட்டுமின்றி, செல்வமும் செழித்து வளரும் என்பதை குறிக்கிறது. எனவே உங்கள் வீட்டின் டைனிங் அறையில் அல்லது டைனிங் டேபிளுக்கு அருகில் கண்ணாடி இல்லாவிட்டால், உடனே வாங்கி வையுங்கள். இதனால் வீட்டில் உணவு அல்லது பணப் பற்றாக்குறை எதுவும் ஏற்படாது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

