Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
உங்க வீடு செல்வ செழிப்போடு இருக்கணுமா? அப்படி வாஸ்து நிபுணர் சொல்ற இந்த ரகசியங்களை தெரிஞ்சுக்கோங்க..
Vastu Tips In Tamil: நாம் ஒவ்வொருவருமே பிரச்சனை இல்லாத மகிழ்ச்சியான மற்றும் செழிப்பான வாழ்க்கையையே வாழ விரும்புகிறோம். அதற்கு நாம் குடியிருக்கும் வீடு நேர்மறை ஆற்றல் நிறைந்து இருக்க வேண்டும். அதோடு வீட்டில் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருட்களும் சரியான இடத்தில், சரியான திசையை நோக்கி இருக்க வேண்டும்.
இந்திய புராணங்களின் படி, செல்வம் மற்றும் செழிப்பின் கடவுள் குபேர பகவான் ஆவார். இவர் வடகிழக்கு திசைக்கு சொந்தக்காரர். இப்படிப்பட்ட குபேர பகவானுக்கு உரிய திசையில் கழிவறை அமைப்பது, காலணி வைப்பது, பெரிய கனமான பர்னிச்சர்களை வைப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

இவையெல்லாம் வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு, பல தடைகளை ஏற்படுத்தும். முக்கியமாக வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருக இந்த திசையை சுத்தமாகவும், விசாலமாகவும் வைத்திருக்க வேண்டும். மேலும் வாஸ்து நிபுணர் சுபம் ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீட்டில் செல்வ செழிப்புக்கான சில வாஸ்து ரகசியங்களை பகிர்ந்துள்ளார். அதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
டிப்ஸ் #1
வீட்டின் வடகிழக்கு திசையில் ஒரு நீரூற்றை (Water Fountain) அமைக்க வேண்டும். இது செல்வம், அமைதி மற்றும் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, வீட்டில் ஆன்மீக வளர்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் என்று வாஸ்து நிபுணர் கூறினார்.
டிப்ஸ் #2
வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் ஒரு ஜோடி யானை சிலையை வைக்க வேண்டும். இந்த யானை சிலை ஞானம் மற்றும் நேர்மறை ஆற்றலையும் குறிக்கிறது. இது வீட்டிற்கு வலிமை, பாதுகாப்பு, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்று வாஸ்து நிபுணர் கூறினார்.
டிப்ஸ் #3
வீட்டின் மேற்கு திசையில் ஒரு கிண்ணத்தில் நாணங்களை நிரப்பி வைத்திருக்க வேண்டும். இது வீட்டில் நிதி நிலைத்தன்மை, செல்வத்தைத் தக்கவைத்தல் மற்றும் செழிப்பைக் கொண்டு வருகிறது. மேலும் இது வீட்டில் செழிப்பு மற்றும் சேமிப்பு ஆற்றலை மேம்படுத்தும் என்று வாஸ்து நிபுணர் கூறினார்.
டிப்ஸ் #4
வீட்டில் கிழக்கு அல்லது தென்கிழக்கில் மூங்கில் செடிகளை வைத்திருப்பது வளர்ச்சி, நேர்மறை மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி ஆரோக்கியம், தொழில் வாய்ப்புகள் மற்றும் செழிப்பை மேம்படுத்துகிறது என்று வாஸ்து நிபுணர் கூறினார்.
டிப்ஸ் #5
வீட்டின் தென்கிழக்கில் ஒரு சிவப்பு நிற விளக்கை அமைப்பது அக்னி தத்துவத்தைத் தூண்டி, செல்வம், செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றலைக் கவர்ந்து, நிதி தொடர்பான வாஸ்து தோஷங்களை சமநிலைப்படுத்தும் என்று வாஸ்து நிபுணர் கூறியிருந்தார்.
எனவே நண்பர்களே! உங்கள் வீடு செல்வ செழிப்போடு இருக்க விரும்பினால், வாஸ்து நிபுணர் கூறிய மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றை பின்பற்றுங்கள். இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பி, செல்வம் பெருகுவதோடு, வீட்டில் உள்ளோரும் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications