Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்!
Mars Nakshatra Transit On 24 July 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். இந்த செவ்வாய் தற்போது ரிஷப ராசியிலும், ரோகிணி நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த செவ்வாய் ஜூலை 24 ஆம் தேதி மிருகசீரிடம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை இருப்பார். இந்த மிருகசீரிடம் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். சொந்த நட்சத்திரத்திற்கு செவ்வாய் செல்வது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. முக்கியமாக இந்த நட்சத்திரமானது புதிய வாய்ப்புகள், அச்சமின்மையைக் குறிக்கிறது.
இந்த நட்சத்திரத்திற்கு செவ்வாய் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். அதுவும் 4 ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியையும், லாபத்தையும் பெறவுள்ளனர். இப்போது செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழிலில் வளர்ச்சியைக் காணப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். குறிப்பாக தொழில் ரீதியாக நல்ல பலனைப் பெறுவார்கள். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தலைமைத்துவ திறன்கள் மேம்படும். பல புதிய வழிகளில் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். புதிய வேலையை தொடங்க நினைத்தால், நல்ல வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
சிம்மம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்குமாறான புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். சிலருக்கு நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
விருச்சிகம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களின் தைரியம் அதிகரிக்கும். முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். வெளிநாடு செல்ல நினைத்துக் கொண்டிருப்பவர்களின் கனவு நனவாகும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
மகரம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சிறப்பான செயல்திறன் காரணமாக பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



